தமிழகத்தில் இன்று
சென்னை:
கலர் டி.வி ஊழலில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா, உறவினர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோரைவிடுவித்துத் தீர்ப்பளித்தார்.
நீதிபதி ராதாகிருஷ்ணன் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா மற்றும் பிறருக்கு எதிரான புகாருக்குத் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. இவர்கள் மூன்று பேரும் இந்த ஊழலில் தொடர்புடையவர்களா என்பது குறித்து உறுதியான ஆதாரம் இல்லை என்றார்.
பிப்ரவரி மாதம் 2-ம் தேதி பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு இதே நீதிபதிதான் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கினார்.இதையடுத்து தர்மபுரி அருகே அதிமுகவினர் நடத்திய கலவரத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவியர் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள்இறந்தனர்.
தற்போது வந்துள்ள தீர்ப்பின் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலில் நிற்க தகுதியிழக்கும் அபாயத்தை ஜெயலலிதா தவிர்த்துள்ளார்.
செல்வகணபதிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை:
அதேசமயம், இதே வழக்கில் குற்றம்சாட்டப்ப்டடிருந்த முன்னாள் ஊராட்சித் துறை அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் அரசு அதிகாரிகள்ஹரிபாஸ்கர், எச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
ஐவருக்கும் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
யு.என்.ஐ
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications