தமிழகத்தில் இன்று
சுவா:
பிஜியில் ஆட்சியைப் பிடித்துள்ள ராணுவம், தனது முக்கிய ஆதரவாளர்கள் சிலரைக் கைது செய்துள்ளதாக ஆயுதப் புரட்சி மூலம் மே 19-ம் திே ஆட்சியைப்பிடித்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் கூறியுள்ளார்.
பிஜியில் திங்கள்கிழமை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிபர் கமிசேசே மாரா ராஜினாமா செய்தார். ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமாஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தீவு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் வெளியேற வேண்டும் என்றும் போலீஸ்உத்தரவிட்டது.
ஜார்ஜ் ஸ்பீடோ தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இன்னும் ஒரு ஆண்டு நானே பிரதமராக இருப்பேன். இந்தியர்ஒருவர் பிஜியில் பிரதமராக இருக்கக் கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை விடுத்தார்.
இந்நிலையில் ஜார்ஜ் ஸ்பீடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராணுவத்தினர் தான் சொல்வதைக் கேட்கத் தயாராக உள்ளார்கள். ஆனால் எனதுஆதரவாளர்கள் நான்கு பேரை ராணுவத்தினர் கைது செய்துள்ளார்கள். எங்கள் கோரிக்கையை ராணுவத்தினர் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்வார்கள்.இப்பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.
ராணுவத் தளபதியுடன், ஸ்பீட் பேச்சு:
இதற்கிடையே பிஜி ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோனல் தாரா கினிகினி கூறுகையில், இன்னும் சில மணி நேரங்களில் தாங்களும், ஸ்பீட் தலைமையிலானபுரட்சிக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறியதாக ஆஸ்திரேலிய ஸ்கை டிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ராணுவத்தின் ஆட்சியில் உள்ள பிஜியில் செவ்வாய்க்கிழமை முழு அமைதி நிலவுகிறது. எந்தவித அசம்பாவிதச் சம்பவமோ,வன்முறையோ நடக்கவில்லை.
இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர செளத்ரியும், அமைச்சர்களும் பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் முழுஅமைதி நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications