பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து: நியூசிலாந்து ஆதரவு
நாமதாம் என்ன யாவகத்துலயோ கொலுச நல்லாத் திறுகிட்டோம் போலுருக்கு; சரி.இவள வேற மாதிரி கதைய முடிப்போம்ன்னு திட்டம் போட்டா. விறகுக் கட்டகொண்டாந்து தரையில ஊணி சாத்திவச்சிட்டு, சும்மாட்டெ எடுத்து உதறி, வழிஞ்சவியர்வய தொடச்சிக்ககிட்டு வந்தவள ஒரு மடக்கு தண்ணிகூட தராம, இந்த நாழியிலஇருக்க ஆமனக்கு முத்த கொண்டி ஊருக்குக் கிழக்குத் திக்கம் இருக்க குளத்துலகொட்டிட்டு வந்துருன்னு முடிக்கி விட்டா.
அவ சரீன்னு கொஞ்ச தூரம் போகவும் இந்த சித்தாத்தாக்காரி, தலைய விரிச்சிப்பொட்டுக்கிட்டு நெஞ்சுல நெஞ்சுல அடிச்சிக்கிட்டு சத்தம் போட்டு ஒப்பாரி வச்சிஅழுதா. என்ன என்னன்ன ஊர்க்காரங்க எல்லாம் ஓடி வராக. ஆடு மேய்க்கப் போனபுருசங்காரனும் ஓடி வந்தாம். என்ன சொல்லி அழுதான்னு கேட்டாங்க.
"அய்யோ நா
ஊத்தக் குடிச்சி உமிழ் குடிச்சி
ஒருவாக் கூழ நாங் குடிச்சி
வாயக் கட்டி வவுத்தக் கட்டி
ஈரச் சீலய இறுக்கிக் கட்டி
அரைக்கா துட்டு ஒன்னரைத் துட்டு
முழுசாச் சேத்த வெள்ளித்துட்டு
அடுத்துவரும் பஞ்சத்துக்கு எண்ணிவச்ச முக்காத்துட்டு
துட்டு சேத்த வீட்டுக்குள்ள
தும்பம் வந்து பூந்துருச்சே
காசு சேத்த வீட்டுக்குள்ளே
கஸ்டம் வந்து சேந்துருச்சே
சேத்து வச்ச துட்டெ எல்லாம்
குளத்துல கொண்டு வீசிட்டாளே ன்னு
ஒப்பாரிய முடிக்கவும் கையில நாழியோட மக வரவும் சரியா இருந்தது.
சித்தாத்தாத்தாச் சொன்னத கேட்டதும் விக்கி விறச்சிப் போயி நின்னா, நாம என்னத்தப்பேசன்னு. ஊர்க்காரங்களுக்கும் அவ அப்பனுக்கும் அவ பேர்ல கோவமின்னாகோவமில்ல. இப்படிக் கொத்தவள இனி வச்சிருந்தா இனி வீடு விளங்காது. இவளஇப்பவே, வீட்டெ விட்டு துரத்திரனும்ன்னு முடிவு பண்ணீட்டாக.
அவளோட அப்பன் அவளுக்கு ஒரு காயத்துல கூழும் எள்ளுத் துவையலும் தந்து,
"நாழித் துட்டை குளத்துல கொண்டி வீசி
எறிஞ்சவளுக்கு இந்த வீட்டுல இடமில்லன்னு முடுக்கி விட்டுட்டாம்.
பெத்த அப்பங்காரங்கிட்டெ இருந்து அந்த எள்ளுத் துவையலையும், கூழையும்வாங்கிட்டு யாருட்டெயும் எதுவும் வாய் பேசம வந்து, அதுகள அதே குளத்துலகொண்டி வீசி எறிஞ்சிட்டு. அந்தப் பேயி இருக்கிற புளிய மரத்தப் பாத்து நடந்தா.
அழுதுக்கிட்டே வார அவளப் பாத்ததும் பேய் புளியமர்த்துலயிருந்து இறங்கிவந்துஅவள்ட என்ன விவரம்னு கேட்டது.
எல்லாத்தையும்சொல்லி இவ இனிநா உசுர வச்சிக்ககிட்டிருக்கிறதுல புண்ணியமில்ல.எனக்கு ஒன்னத் தவித்து யாருந் துணையில்ல. நாஞ் சாவுறதுக்கு நீதாந் துணைசெய்யனு. நானுஞ் செத்து பேயாகி ஒங்கூடயே இருக்கேன்னா.
சிரிப்பு வந்தது பேய்க்கு.
அவளோட கையப் பிடிச்சி, வா எங்கூடன்னு கூப்பீட்டுப் போச்சி.
ரெண்டு பேரும் அத்துவானக் காட்டுக்குள்ள போனாக. அங்கெ ஒரு காளி கோவிலு.காளி சிலைக்கு முன்னால ஒரு தீவட்டி மதமதன்னு எரிஞ்சிக்கிட்டிருக்கு. அதப் பேயிஎடுத்து அவகிட்டத் தந்து இந்தத் தீவட்டி நெருப்பால என்னப் பொசுக்குன்னது. இவபயந்துட்டா. நாமாட்டேம். எனக்கு உபகாரமா இருந்த ஒம் முகத்தெ நா பொசுக்கமாட்டேம்ன்ா.
நீ இப்படிச் செய்யலைன்னஈ நா ஒம் முகத்த பொசுக்கிருவேம்னு பயமுறுத்தவும்,காளிய மனசுல நினைச்சுக்கிட்டு அந்தப் பேயோட முகத்தப் பொசுக்கவும் அந்தப்பேயோட முகம் எரிஞ்சி ஒரு அழகான ராஜகுமாரனோட முகமா ஆனது. அப்பிடியேஉடம்பெல்லாம் எரிச்சி, எரிச்சி அழகான ராஜகுமாரனோட உடம்பா ஆயிரிச்சி.
இது எப்பிடின்னு கேட்டா அவ.
அதுக்கு அந்த ராஜகுமாரன் சொன்னாம்:
நா ஒரு தப்பு செஞ்சிட்டெம். ஒரு முனிவர் என்னெ பேயா ஆகி அந்தப் புளிய மரத்துலஇரு. இன்ன மாதிரி ஒரு பொண்ணு வந்து விறகு கட்டு கொடியால வீசி ஒன்னெஎழுப்புவா. இந்தக் காளி கோயிலுக்கு வந்து தீப் பந்தத்தால எரிஞ்சி நீ பழயபடிராஜகுமாரனா ஆயி, அவள கலியாணம் முடிஞ்சிக்கிட்டு அரண்மனைக்குப் போயிஒன்னோட குடி படைகளோட சந்தோசமா இருப்பென்னு அந்த முனிவர் தந்தவாக்கைச்சொல்லி, ரெண்டு பேரும் காளியக் கும்பிட்டு அங்கேயே மாலை மாத்திகலியாணம் பண்ணிக்கிட்டு அரண்மனைக்குப் போயி ராஜாங்கம் நடத்தி சந்தோசமாஇருந்தாங்களாம்.
பிறகு அந்த சித்தாத்தாக்காரி என்ன ஆனா?
அவளையும் அப்பங்காரனையும் அரண்மனைக்குத் தரவழைச்சி சபையில வச்சிவிசாரிச்சி சித்தாத்தாக்காரிக்கு தண்டனை கொடுத்து அப்பங்காரன மன்னிச்சிஅரமனையில அவக கூட வச்சிக்கிட்டாங்களாம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications