சி.பி.ஐ.யிடம் கிரிக்கெட் சூதாட்ட வீடியோ கேசட்டை ஒப்படைத்தா பிரபாகர்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னிடம் இருந்த ஒரே ஆதாரமான வீடியோ கேசட்டை, கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் மத்தியபுலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகளிடம் மனோஜ் பிரபாகர் ஒப்படைத்துள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கபில் தேவ், அசாருதீன், ஜடேஜா, மோங்கியா உள்ளிட்டவர்கள் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் குற்றம் சாட்டினர். மேலும், தனக்கு ரூ.25 லட்சம் கொடுக்க கபில் தேவ் முன் வந்தாகவும் அவர் கூறினார்.
ஏற்கெனவே, தான் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று கொடுத்துள்ளார் பிரபாகர்,இதற்கிடையே தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், பிரபாகர் கூறுவது பொய் என்றும் கபில்தேவ் அறிவித்தார்.
அப்படி கபில் தேவ் அறிவித்த சில நாட்களில் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரபாகர், தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம்உள்ளதாகவும், இது தொடர்பாக முன்னாள் மற்றும் இந் நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் ரகசியமாக எடுக்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய வீடியோ கேசட்டை வெளியிட்டார்.
அதில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, சித்து, மஞ்ச்ரேகர் உள்ளிட்டோர் பேட்டி அளித்துள்ளனர். இந்த கேசட் வெளியானவுடன் கிரிக்கெட் உலகில் பலர் திகைப்புக்குஉள்ளாகினர். உண்மையிலேயே இந்திய கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தன.
இந் நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரித்து வரும் சிபிஐயிடம் தன்னிடமிருந்த வீடியோ கேசட்டை பிரபாகர்சனிக்கிழமை ஒப்படைத்தார். சிபிஐ விசாரணைக் குழு தலைமை அதிகாரி ஆர்.என். சவானியிடம் நேரடியாக தன்னிடமிருந்த 9 கேசட்டுகளை அவர் ஒப்படைத்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications