தமிழகத்தில் இன்று
சேலம் அரசு அலுவலகத்தில் ஊழியை தற்கொலை
சேலம்:
சேலம் அரசு கருவூலத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டக் கருவூலத்தில் போலி பில்கள் கொடுத்து சுமார் ஒரு கோரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் தற்கொலைசெய்து கொண்டுள்ளர்.
சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கருவூலம் இயங்கி வருகிறது. அரசு சம்பந்தப்பட்ட நிதி , சம்பளம் உட்பட அனைத்துபட்டுவாடாக்களும் இந்த அலுவலகத்தில் தான் அனுமதி பெற்று வழங்கப்படும்.
சேலத்தில் வணிகவரி அலுவலகத்தில் தான் அனுமதி பெற்று வழங்கப்படும். சேலம் வணிகவரி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர்பாஸ்கரன். இவர் கடந்த ஜனவரி 1 -ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரையில் சுமார் 13 போலி பில்களை தயாரித்து அதை கருவூலத்தில் கொடுத்துசுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வணிகவரி உதவி ஆணையர் சுகுமாரன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் முகமது நசிமுதீன் உத்தரவின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் சேலம், தர்மபுரி மாவட்ட சிறப்பு விசாரணை பிரிவினர்மாவட்டக் கருவூலத்தில் சோதனை நடத்தினர். கருவூலத்தில் பாஸ்கரன் போலி பில்கள் கொடுத்து பணம் வாங்கியது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக, கருவூலத்தில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கருவூலத்தில் கணக்கு அதிகாரியாக பணிபுரிந்துவந்த சம்பா என்பவர், வெள்ளிக்கிழமை காலை அலுவலத்திற்கு வந்த சம்பா, திடீரென்று வீட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டார்.
அங்கே உடலில் மண்ணெண்னைய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். கருவூலத்தில் நடந்த ஊழல், ஊழியர் தற்கொலை குறித்தும்அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications