பேனா விளம்பரத்திலிருந்து டெண்டுல்கர், காம்ப்ளி, அகார்கர் நீக்கம்
மும்பை:
புகழ்பெற்ற டுடே பேனாக்களைத் தயாரித்து வரும் டுடே நிறுவனத்தின் விளம்பரத்திலிருந்து இந்தியகிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, அஜித் அகார்கர் ஆகியோர்நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரோலியா கூறியதாவது:
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் கூறப்பட்டுள்ளன.இது தொடர்பாக, சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில், எங்கள் நிறுவன விளம்பரங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்களை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மும்பை ரஞ்சிக் கோப்பை அணிக்கு ஸ்பான்சர் செய்ய கடந்த ஆண்டுஒப்பந்தம் போடப்பட்டது.
மேலும், அந்த அணியைச் சேர்ந்த 5 வீரர்கள் நடிக்கும் விளம்பரப் படமும் எடுக்கப்பட்டது. ஆனால்,சச்சின் நடித்த பகுதி மட்டுமே வெளியிடப்பட்டது. இந் நிலையில், சச்சின் டெண்டுல்கர் பிரச்சினையைஏற்படுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை அரையிறுதிஆட்டத்தில் டுடே பேனா நிறுவனத்தின் சின்னம் பொறித்த சட்டையை அணி டெண்டுல்கர்மறுத்துவிட்டார்.
இதையடுத்து, 5 வீரர்களும் நடித்த விளம்பரப் படத்தை முழுவதுமாக வெளியிடுகிறோம் என்று உறுதிஅளித்ததன் பேரில், எங்கள் நிறுவனத்தின் சின்னம் பொறித்த சட்டையை அணிய டெண்டுல்கர் ஒப்புக்கொண்டார்.
இந் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆகவே,எங்கள் நிறுவனத்தின் பேனா விளம்பரத்தில் இருந்து டெண்டுல்கர், காம்ப்ளி, அகார்கர் ஆகியோரைநீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக ஹிந்தித் திரைப்பட உலகில் புதிய வரவான ரித்திக்ரோஷனைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிரிக்கெட் விளையாட்டு மீது மக்களின் கருத்து திசைதிரும்பியுள்ளது. எங்கள் விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்கள் இருந்தால், எங்களது பொருட்களின்விற்பனை குறையும் என்று கருதுகிறோம். ஆகவே, விளம்பரங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்களைநீக்க முடிவு செய்துள்ளோம் என்றார் துரோலியா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications