முகத்தில் தெளித்த சாரல்...
ஓடும் ரயிலில் திருடர்களை உதைத்து விரட்டிய விளையாட்டு வீராங்கனை
மும்பை:
மும்பையில் ஓடும் ரயிலில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட முயன்ற இருவரை, விளையாட்டு வீராங்கனை ஆர்த்தி பிரதான்,
கடுமையாக அடித்து, உதைத்து அவர்களது முயற்சியை முறியடித்தார்.
அர்ஜூனா விருது பெற்றவரான பிரபல நீண்ட தூர ஓட்டப் பந்தய வீராங்கனை ஆர்த்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தேரியிலிருந்து, தாதருக்கு மின்சாரரயிலில் சென்று கொண்டிருந்தார். முதல் வகுப்புப் பெட்டியில் அவர் பயணித்தார். அவர் இருந்தது பெண்களுக்கான பெட்டி. அதில் அவரும், இன்னொரு பயணியும்மட்டுமே இருந்தனர்.
ரயில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் பெட்டியில் நுழைந்தனர். இருவரும் இளைஞர்கள். அவர்களில் ஒருவனுக்கு 10 வயதுதான்இருக்கும். இருவரும், ஆர்த்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் தருமாறு மிரட்டினர். சங்கிலி தங்கம் அல்ல என்று ஆர்த்தி கூறியபோது, திடீரென கத்தியைஎடுத்து மிரட்டினர். ரயில் அப்போது பந்த்ரா நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.
நிலைமையை உணர்ந்து சுதாரித்த ஆர்த்தி, உடனடியாக அவர்களில் ஒருவனை நோக்கி குத்தியுள்ளார். அப்போது, அவனுடன் இருந்த சிறுவன், ஆர்த்தியைரயிலிலிருந்து தள்ள முயன்றான். ஆனால் சமாளித்துக் கொண்ட ஆர்த்தி, அவனது சட்டைக் காலரைப் பிடித்து கடுமையாக அடித்து, உதைத்துள்ளார்.
அப்போது ரயில் தாதர் நிலையத்தை நெருங்கியது. தங்களது நிலைமை மோசமாவதை உணர்ந்த இரு திருடர்களும், ரயில் மெதுவாக சென்றதைப் பயன்படுத்திகீழே குதித்துத் தப்பினர். ரயிலிலிருந்து இரண்டு பேர் நிலை குலைந்த நிலையில் இறங்கி ஓடுவதைப் பார்த்த பொதுமக்கள், அவர்களைத் துரத்தினர். ஆனால்இருவரும் தப்பி விட்டனர்.
கடந்த ஆண்டும் இதோபோன்ற ஒரு சம்பவம் மும்பை ரயிலில் நடந்தது. ஜெயபாலா அஸார் என்பவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போதுகுடிபோதையில் இருந்த ஒருவர், ஜெயபாலாவை பிடித்துக் கீழே தள்ளினார். இதில் ஜெயபாலாவின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications