சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 150 பேருக்கு பரிசு
டெல்லி:
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் மற்றும்வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வீரர், வீராங்கனைகள் தவிர 18 பயிற்சியாளர்களுக்கும் இப் பரிசு வழங்கப்பட்டது. டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரொக்கப்பரிசுகளை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தீன்ஷா வழங்கினார்.
சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 1986-ம் ஆண்டு முதல் இந்தரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதக்கம் வாங்கியவர்களுக்கும், எதிர்கால விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும்உத்வேகமும், புத்துணர்ச்சியும் ஏற்படுவதற்காக இந்த சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மல்லேஸ்வரி, குஞ்சராணிதேவி, ஜோதிர்மயி சிக்தர், பி.டி. உஷா உள்ளிட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.15 லட்சம் வரைபல்வேறு பிரிவுகளில் 150 பேருக்கு இப் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை சுமார் 950 வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications