தமிழகத்தில் இன்று
பேனா உற்பத்தியை 20 லட்சமாக அதிகரிக்க "பென்ஸ் டுடே திட்டம்
மும்பை:
தினசரி உற்பத்தியை அதிகரிக்க ரூ.18 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்தை பிரபல பேனா நிறுவனமான பென்ஸ் டுடே நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற பென்ஸ் டுடே வகைப் பேனாக்களை டுடே குரூப் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந் நிறுவனம் தற்போது நாள் ஒன்றுக்கு 12 லட்சம்பேனாக்கள் தயாரிக்கிறது. இந்த எண்ணிக்கையை 20 லட்சமாக அதிகரிக்க நிறுவனத்தை ரூ.18 கோடியில் விரிவுபடுத்த அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரோலியா கூறியதாவது:
டுடே வகைப் பேனாக்களுக்கு உலக அளவில் நல்ல டிமாண்ட் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தினசரி உற்பத்தி செய்யப்படும் பேனாக்களின் அளவைமேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டுடே நிறுவனத்தை ரூ.18 கோடியில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத்தில் வாபியில் உள்ள பேனா தயாரிப்பு மையத்தின் வசதிகளை விரிவுபடுத்துவதுடன், மகாராஷ்டிரா மாவட்டம்நாசிக்கில் புதிய பேனா தயாரிப்பு பிரிவும் ஏற்படுத்தப்படும். மேலும் தாத்ராவில் மோல்டிங் பிரிவும் மேம்படுத்தப்படும்.
டுடே நிறுவனத்தின் பிரத்யேக விற்பனை மையங்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் டுடேநிறுவனத்தின் பிரத்யேக விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, நாடு முழுவதும் சுமார் 3லட்சம் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.
தற்போது டுடே நிறுவனத்தின் சார்பில் ரூ.2 முதல் ரூ.25 மதிப்புள்ள பேனாக்கள் தயாரிக்கப்படுகின்றன. வரும் செப்டம்பர் மாதம் முதல் புதிய வகைப்பேனாக்கள் தயாரிக்கப்படும் என்றார் துரோலியா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications