முகத்தில் தெளித்த சாரல்...
பொதுப்பணித்துறையில் திமுக அத்துமீறல்: த.மா.கா.புகார்
சென்னை:
தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் வெளிப்படையான,எதற்கும் அஞ்சாத அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.அமைச்சரின் அன்பிற்குரியவர்களால் செய்யப்படும் இந்தஅத்துமீறல்களை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்என்று தமாகா புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து தமாகா பொதுச் செயலாளரும், சட்டமன்றஉறுப்பினருமான கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:
கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கண்காணிப்புபொறியாளர் அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கால்வாய்கள்மற்றும் வாய்க்கால்கள் தூர்வாருவதற்கு பதினைந்துவேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த வேலைகளைசெய்வதற்காக 431 ஒப்பந்தக்காரர்கள் விண்ணப்பப்படிவங்களை வாங்கியிருந்தனர்.
கடந்த 1ம் தேதி டெண்டர் போடுவதற்கு கடைசி நாள். ஆனால்,கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே,திமுகவை சேர்ந்தவர்கள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளே வரக் கூடாதுஎன்று சொல்லி அவர்களை விரட்டியடித்தனர்.
தாங்கள் சொல்லுகிற ஆட்களுக்குத் தான் வேலை. டெண்டரைஎல்லாம் நாங்கள் ஏற்கனவே விட்டு விட்டோம். நீங்கள்வெளியேறலாம் என்று சொல்லி ஒப்பந்தக்காரர்களைவிரட்டியடித்தனர்.
இந்த வன்முறை வெறியாட்டத்தை பொதுப் பணித் துறைகண்காணிப்புப் பொறியாளரும், காவலுக்கு நின்ற காவல் துறைஅதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.இவைகளையெல்லாம் மீறி டெண்டர் போடச் சென்ற ஒருஒப்பந்தக்காரர் வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.
431 விண்ணப்பங்களைப் பெற்ற ஒப்பந்தக்காரர்கள் மத்தியில் 15வேலைகளுக்கு 30 விண்ணப்பங்கள் மட்டுமே போடுவதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்ததன் மூலம் 40 லட்சம்ரூபாய் கமிஷனை குறிப்பிட்ட சில திமுகவினர் பெட்டிகளில்அடைத்துக் கொண்டு பறந்தோடி விட்டனர்.
பொதுப் பணித் துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள்எதிரிலேயே இந்த பகல் கொள்ளை நடக்கிறது என்று சொன்னால்சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. இந்ததவறுகளை பொதுப் பணித் துறை பொறியாளர் மற்றும் மாவட்டநிர்வாகம் அனுமதிப்பதற்குக் காரணம்.
கமிஷன் பெற்ற நபர் அமைச்சரின் அன்பிற்குரியவர் என்பதாலும்,அவரைப் பகைத்துக் கொண்டால், பொதுப்பணித் துறையில்உள்ள பெரிய அதிகாரிகள் தொடர்ந்து வேலை செய்ய முடியாதுஎன்பதாலும் சித்தன் போக்கு, சிவன் போக்கு என்று நடந்துகொள்கின்றனர்.
வெளிப்படையான ஒப்பந்த முறைகள் தமிழகத்தில்நடைபெறுவதாக முதல்வர் கூறி வருகிறார். ஆனால், பொதுப்பணித் துறையில் வெளிப்படையான, எதற்கும் அஞ்சாதஅத்துமீறல்கள் தான் நடந்து வருகின்றன. இவ்வளவு பெரியதவறைச் செய்வதற்கு ஒரு கும்பலுக்கு அரசியல் பலமில்லாமல்முடியாது என்பதை அனுபவசாலியான முதல்வர் ஒத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.
தவறு செய்பவர்களுக்கு இந்த அரசியல் பலம் எங்கிருந்துவந்திருக்கிறது? யார் அளித்துள்ளார்கள்? என்பதைமுதல்வரிடமிருந்து அறிய விரும்புகிறேன்.
சிதம்பரம் பொதுப் பணித் துறை செயற்பொறியாளர்அலுவலகத்தில் டெண்டர் பெட்டியில் ஒப்பந்தப் புள்ளிகளைபோடச் சென்றவரிடம் இருந்து பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர் வன்முறையாளர்கள். அக்கும்பல் பிற்படுத்தப்பட்டோர்துறை அமைச்சரின் அன்பிற்குரியவர்.
இனிமேல் பொதுப் பணித் துறை ஒப்பந்தப் புள்ளிகளை திமுகமாவட்ட அலுவலகத்திலேயே ஏலம் விடப்படும் என்றுஅறிவித்து விட்டால் பிரச்னையே இல்லை. இல்லையேல்முதல்வர் தலையிட்டு மறு டெண்டர் விட உத்தரவிட வேண்டும்என்று அழகிரி கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications