தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டதால்அதிருப்தியடைந்த தற்போதைய நிர்வாகிகள், அலுலகத்தை உரிமையாளர்களிடம்ஒப்படைத்து விட்டு, தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்து விட்டுச் சென்றுவிட்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கப்பட்டு, புதியதலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். இதனால்தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
குறிப்பாக, தற்போதைய தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி வெளிப்படையாகவேதனது குமுறலை வெளியிட்டுள்ளார். இளங்கோவன் நியமனம், தமிழகத்தில் காங்கிரஸ்வளர்ச்சிக்கு உதவாது. இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகஉள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, சென்னை மைலாப்பூர் கிருஷ்ணசாமி அவென்யூவில்வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த காங்கிரஸ் அலுவலகத்தை இளங்கோவன்தலைவராக நியமிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த
காங்கிரஸ் நிர்வாகிகள், கோபத்தில் அலுவலகத்தை அதன் உரிமையாளரிடம்ஒப்படைத்து விட்டனர். தொலைபேசி இணைப்புகளையும் அவர்கள் துண்டித்துவிட்டனர்.
அனைத்துத் தலைவர்களும் அதிருப்தியில்:
திண்டிவனம் ராமமூர்த்தி தவிர அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களுமே, இளங்கோவன்நியமனத்தால் அதிருப்தியடைந்துள்ளனர்.
முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன் ஆகியோர் இளங்கோவன்நியமனம் குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
த.மா.கா.வில் சேருவாரா திண்டிவனம்?
இளங்கோவன் நியமனம் குறித்து பெரும் அதிருப்தியில் உள்ள திண்டிவனம்ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக அவர் மூப்பனாருடன் நெருக்கமாக இருப்பதால், தமிழ் மாநில காங்கிரஸில்சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் தனிக் கட்சியை அவர்துவக்கலாம் என்றும் தெரிகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications