தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
தமி-ழ-க காங்கிரஸ் ... ஒரு "பரிதாப ரிப்போர்ட்

சென்னை:

Dindivanam Ramamurthy
ஒரு வழியாக தமிழக காங்கிரஸ் கட்சியில் புதியதலைவராக, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் தொடரும் தலைவர் எதிர்ப்பு கொள்கைஇப்பொழுதும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இன்று நேற்றல்ல தமிழக காங்கிரஸ் கட்சியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த தலைவர் எதிர்ப்புகொள்கை இருக்கிறது. மூப்பனார் , வாழப்பாடி ராமமூர்த்தி, தங்கபாலு, குமரிஅனந்தன், திண்டிவனம் ராமமூர்த்திஇப்படி எவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும் உடனடியாக தலைவரை மாற்-று என்று எதிர்ப்பு கிளம்பும்.

இது பற்றி கட்சியின் வளர்ந்து வரும் இளைய தலைவர் ஒருவர் வேதனையோடு நம்மிடம் பேசினார். தலை வர்எதிர்ப்பு என்பது கட்சியின் சாபக்கேடாகவே ஆகிவிட்டது. இந்த கட்சியில் எல்லோருமே தலைவர்கள். கட்சியில்இருக்கின்ற ஒவ்வொரு மூத்த அனுபவம் உள்ள தலைவர்களும், ஒவ்வொரு துருவங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் தொண்டர்கள் மிகச்சேர்ந்து போய் இருக்கிறார்கள்.

இப்பொழுது கூட பாருங்கள். இளங்-கோ-வன் நிய-ம-னத்-தை, இப்-போ-தை-ய தலை-வர் திண்டிவனம் ராமமூர்த்தி,பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டிருக்கலாம். இதுவரை தலைவராக இருந்தவர் இப்பொழுது கட்சியின்தலைமையை மதித்து புதிய தலைவருக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும், எதிர்ப்பை தெரிவிக்காமலாவதுஇருந்திருக்கலாம்.

இளங்கோவன் கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டவுடனேயே இந்த முடிவை ஏற்கமாட்டேன் என்கிறார். இது மட்டுமல்ல, நிருபர்களிடம் அ-வர் பே-சு-கை-யில், "காங்கிரஸ் கட்சியின் எல்லாசூழ்நிலைகளிலும் சோதனையான கால கட்டங்களிலும் உடன் இருந்து பணியாற்றிய காங்கிரஸ் கட்சிக்குவிசுவாசானவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ராஜீவ் காந்தியின் கட்டளையை மீறி சட்டசபையில் கட்சியைகாட்டிக்கொடுத்து கட்சி கட்டளைக்கு நேர் மாறாக எதிர்த்து வாக்களித்து விட்டு பல கட்சிகளுக்கு சென்றுஇறுதியாக திவாரி காங்கிரசுக்கும் சென்று விட்டு, மீண்டும் காங்கிரஸூக்கு வந்த ஒருவரை தலைவராக நியமனம்செய்துள்ளனர் என்றிருக்கிறார்.

திண்டிவனம் ராமமூர்த்தி தலைவராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பலர் எதிர்ப்பார்கள். இல்லை என்றால்இவர் எதிர்ப்பார்..இது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவருக்குத் தேர்தல்நடத்தியிருந்தால்.. தமிழகத்தில் ஆங்காங்கே குழப்பம் அதிகமாகி.. கட்சியின் படு மோசமானகோஷ்டிப்பூசலைக்கண்டு நாடே சிரித்திருக்கும் என்று சொன்னார் அந்த பிரமுகர்.

அவர் அருகிலேயே இருந்த த.மா.கா பிரமுகர் ஒருவர் இப்படிச்சொன்னார். திண்டிவனம் ராமமூர்த்தி தலைவராகஇருந்த பொழுது , அவரை பலர் எதிர்த்தனர்.. அப்பொழுது தலைமைக்கு கட்டுப்படவேண்டும் என்றார். ஆனால்பாருங்கள் இன்று அவரே எதிர்ப்பது கட்சியை பலவீனப்படுத்துகின்ற செயல். தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ளமுக்கிய பிர-முகர்கள்.. முன்னாள் தலைவர்கள் எல்லோருமே திறமைசாலிகள்.. கணிசமான அளவு தொண்டர்களின்செல்வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனாலும் அவர்களுக்கிடையே உள்ள காழ்ப்புணர்ச்சி, பொறாமைஆகியவை கட்சி-யில் மட்டுமல்ல..தனிப்பட்டமுறையில் தொண்டர்களிடையே அவர்களுக்கு இருந்த செல்வாக்கும்இப்பொழுது குறைந்து விட்டது.

ஒரே உறைக்குள்.. பல கத்திகள் இருந்தால் என்னாகும்..உறை கிழியும்.. அதேகதை தான் இப்பொழுதும்நடந்திருக்கிறது. கிழிந்த உறை ..காங்கிரஸ் கட்சி. இதை டெல்லியில் உள்ள தலைவர்களும் நன்றாகவே உணர்ந்துதான் இருக்கிறார்கள் அவர்களாலேயே சரிசெய்யப்படமுடியவில்லை என்பது தான் உண்மை என்கிறார் அந்தத.மா.கா பிரமுகர்.

Moopanarதமிழக காங்கிர-ஸி-லி--ருந்-து -மூப்பனார் வெளியேறி த.மா.கா என்று கட்சியை ஆரம்பித்தார். இன்று தமிழகத்தில்பலமான கட்சி.. பெரும்பாலான காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள்..காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைமை குழப்பம்,விசுவாசமாக செல்பட்டாலும் நீ அவர் ஆளு இவர் ஆளு என்கிற பஞ்சாயத்திலேயே சோர்ந்-து -போ-னதொண்டர்கள் த.மா.காவில் சேர்ந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு என்று இருந்த தொண்டர்களும் த.மா.காவில்சேர்ந்தார்கள்.

-திண்-டி-வ-னம் கூ-று-கை-யில், சில தினங்களுக்கு -முன் டெல்லி சென்றிருந்த பொழுது.. மேலிடத்தில் பேசினோம்.அதன் படி தலைவர் பதவியில் நானே நீடிக்கவேண்டும் அல்லது தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தவேண்டும் . நான்,தங்கபாலு, குமரிஅனந்தன் ஆகிய வரில் யாராவது ஒருவரை தலைவராக நியமித்தால் அதனை மூவரும் ஏற்றுகட்சிப் பணிகளை ஒற்றுமையாக செல்படுத்துவோம் என்று தெளிவாகத் தெரிவித்தோம். எங்களது கோரிக்கையைமேலிடம் பரிசீலிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த புதிய தலைவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன். இனிஅடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்துப்பேசி முடிவுசெய்வேன் என்றிருக்கிறார்.

எதிர்ப்பு கோஷ்டிகள் அடுத்தடுத்து புதிய தலைவருக்கு எதிராக கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. தமிழககாங்கிரஸ் கட்சியில் 35 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் பத்து மாவட்டத் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்திஆதரவாளர்கள். 18 மாவட்டத்தலைவர்கள் தங்கபாலுவின் ஆதரவாளராக இருக்கின்றனர். 5மாவட்டத்தலைவர்கள் பிரபுவின் ஆதரவாளராக இருக்கின்றனர். இவர்-கள் மட்-டு-மே இளங்--கோ-வ-னைஆத-ரிக்-கின்-றனர்.

இந்த தலைவராலும் கட்சிப்பணியில் கவனம் செலுத்துவதைவிட, கட்சியில் அவருக்கு உள்ள எதிர்ப்புகளைசமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும் என நம்-ப-லாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+