தமிழகத்தில் இன்று
இலங்-கை-யைப் பி-ரிப்-ப-தில் தவ-றில்-லை: மீண்-டும் கூ-று-கி-றார் க-ரு-ணா-நி-தி
சென்னை:
இலங்-கை-யைப் பிரித்-து த-னி நா-டு அமைப்-ப-தே அங்-கு நீடித்-து வ-ரும் பிரச்-சி-னைக்-கு நிரந்-தர தீர்-வா-க அமை-யும்- என்-று தமி-ழ-க மு-தல்-வர்க-ரு-ணா-நி-தி மீண்-டும்- கூறி-யுள்-ளார்.
இந்தியாவின் கொல்லைப் புறமான இலங்கையில் அமைதி தவழ, கால் நூற்றாண்டிற்கும் மேலாக முற்றி விட்ட இனப் பிரச்னைக்கு ஏதாவது ஒருமார்க்கத்தில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்-றும் கருணாநிதி -கூ-றி-யுள்-ளார்.
இலங்கை பிரச்னையில் செக்கோஸ்லோவேகியா போல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தனது பிறந்த நாள் விழாவில் கருணாநதி கருத்து தெரிவித்தார். அவரதுகருத்து கடும் விமர்சனத்தை கிளப்பியது.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செவ்வாய் கிழமை சென்னையில் அவர் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை வருமாறு:
சொகுசான குளுகுளு அறையிலே உட்கார்ந்து கொண்டு கண்ணாடி பரப்பிய மேஜையில் பூகோள படத்தை விரித்து வைத்துக் கொண்டு இலங்கையைத் துண்டாடக் கூடாதுஎன்று பேசுவோர் நிலை வேறு; தரையில் உள்ள உண்மைகளை புரிந்து கொண்டு பேசுவோர் நிலை வேறு.
எந்த நாட்டையும் பிரித்துக் கொடு என்று சொல்வதற்கு பிற நாட்டவருக்கு உரிமையில்லை என்பதை நானும் உணர்ந்தவன் தான். ஆனால், இலங்கையில் நிலைமைஎன்ன?
ஈழப் பகுதியில் வாழ்கின்ற தமிழர்கள் கூலியாகச் சென்று குடி அமர்ந்தவர்கள் அல்ல. இலங்கையின் பூர்வீகக் குடிகள் அவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அவர்களுடைய உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் முழுவதுமாக பறிக்கப்பட்டன.
இறுதியாக அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமைக்கும் கட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்ட பிறகு இலங்கைத் தமிழர்களின் நிலை தலைகீழாக மாறியது.முதலில் தங்களின் உரிமைகளை பெற காந்தீய வழியில் தான் அறப்போராட்ட முறைகளை கையாண்டனர்.
அடக்குமுறைகளை ஏவி, தமிழர்களை கொடுமைப்படுத்தியதை இலங்கை அரசே மறுக்க முடியாது. அதன் பிறகு தான் தங்களுடைய உரிமைகளைப்பெறுவதற்காக அவர்கள் வேறு வழியைத் தேர்ந்தெடுத்தனர்.
அவர்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து அவர்களையும் சிங்கள மொழி பேசுவோருக்கு ஒப்பான பிரஜைகளாக நடத்தினால், பிரச்னை தீரும் என்றால்,அதற்கு யாரும் தடை சொல்ல மாட்டார்கள். நிச்சயம் நானும் தடை சொல்ல மாட்டேன். ஆனால், உரிமைகளைக் கொடுக்காமல் "தற்காலிகத் தீர்வுகாண்பது பிரச்னையை ஒத்தி வைப்பது போன்றதாகும். உலகெங்கும் உரிமைக்குரல் மதிக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ஸ்காட்லாந்திற்கும், வேல்ஸ்க்கும் உரிமைகள் கொடுத்து அங்கே அதிகாரத்தைப் பரவலாக்கிசட்டசபைகளை உருவாக்கியிருக்கிறது பிரிட்டன்.
உரிமைகளை மதித்து போற்றப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. இப்போது இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளான தமிழர்களுக்கு என்னென்னஉரிமைகளை வழங்க இருக்கிறது? சிலர் குவாசி-பெடரல் என்கின்றனர். சிலர் "கான்-பெடரல் என்கின்றனர். இதுபற்றி இலங்கை அரசு தெளிவாகத் தனதுநிலையைத் தெரிவிக்க வேண்டும்.
இதில் இலங்கை அரசும், அங்குள்ள எதிர்க் கட்சியும் பொறுப்பேற்றிருப்பது போலவே அங்கே மூன்றாவது கட்சி ஒன்று இருக்கிறது அதுதான் புத்தவாதிகள்.அரசியல்வாதிகள் எடுக்கின்ற முடிவுக்கு கூட புத்தமதவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதிபர் பண்டாரநாயகாவை சுட்டுக் கொன்றது புத்தமதசாமியார் என்பதை மறந்து விடுவதற்கில்லை.
இலங்கை ராணுவத்தை பற்றி நம்மனைவருக்கும் தெரியும். இப்போது எதிராளிகள் வைத்திருக்கும் போர்க் கருவிகள் அனைத்தும் இலங்கை ராணுவத்திடம்இருந்து கைப்பற்றப்பட்டவை. இலங்கை சிப்பாய்களுக்கு போரிட வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ இல்லை என்பதை அந்நாட்டினரே ஒப்புக்கொள்கின்றனர்.
இத்தகைய நிலையில் அந்த அரசுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தற்காலிகமாகக் "கூலிப் படையை அனுப்பி நிலைமையைச் சரி செய்வது என்பது உகந்தவழியாகவும், நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியாது.
எனவே தான் இந்தியாவின் கொல்லைப் புறமாக இருக்கிற இலங்கையில் ஒரு நிரந்தரத் தீர்வு, அமைதியான தீர்வு ஏற்பட வேண்டும் என்று கருதுவதில் நான்யாருக்கும் இரண்டாவது அல்ல.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உள்நாட்டுப் போர் நீடிக்க வேண்டும்? இரு தரப்பிலும் இன்னும் எத்தனை பேர் செத்து மடிய வேண்டும்? இன்னும் எத்தனைஆயிரம் பேர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டும்? இந்த ஆதங்கத்தில் தான், அரசியல் தீர்வு ஒன்று தான் இதற்கு உகந்த வழி என்று கூறினேன். ராணுவத்தீர்வு உகந்த மார்க்கம் ஆகாது.
அரசியல் தீர்வு என்பது என்ன? குவாசி பெடரலா? கான்பெடரலா? அல்லது செக்கோஸ்லோவேகியா மார்க்கமா? என்று நான் கேட்டதில் தவறில்லை.இதில் எந்த மார்க்கத்தை இருவரும் ஒப்புக் கொண்டு கையாண்டாலும் இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தெற்கு ஆசியாவிற்கோ எந்தவித ஆபத்தும் வந்துவிடாது என்பது தங்-கக் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும்.
என் பிறந்த நாள் விழா பேச்சை முழுமையாகப் படித்திருந்தால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கும். என்னுடைய பேச்சு மொழி வெறி காரணமாகதெரிவிக்கப்பட்ட கருத்து அல்ல. மனிதாபிமானத்தின் அடிப்படையிலே தெரிவிக்கப்பட்ட கருத்து.
இலங்கையின் இனப் பிரச்னை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொள்கையை இலங்கை அரசுமாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டுள்ள கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிற கருத்தாக என் கருத்தையும் எடுத்துக் கொண்டு,என் முழுமையான பேச்சை அணுக வேண்டும் என்று அவசரக்கார விமர்சகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் மீண்டும் சொல்கிறேன். ஏதாவது ஒரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்து அரசியல் தீர்வு கண்டு போரை நிறுத்துங்கள். தமிழ்நாட்டிற்கு அகதிகளை அனுப்பி எங்களைஅவதிக்கு உள்ளாக்காதீர்கள். இந்தியாவின் கால்லைப் புறத்தில் அமைதி தவழட்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.
கால் நூற்றாண்டிற்கு மேல் முற்றிவிட்ட இனக் குரோதத்திற்கும், விரோதத்திற்கும் கசப்பாக இருந்தாலும், இதுவே உகந்த மருந்து. வியாதியை தீர்த்து வைக்கும் நிரந்தர மருந்துஎன்-று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications