யூரோ-2000: ஸ்பெயின் வீரர்களுக்குக் காத்திருக்கும் ரூ.1.1 கோடி பரிசு
மாட்ரிட்:
பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகளில் நடைபெற உள்ள -யூ-ரோ-2000 கால்பந்துப் போட்டியில் கோப்பையை வென்றால் ஸ்பெயின் வீரர்கள் 22பேருக்கும் தலா ரூ.1.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அந் நாட்டு கால்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து, யுயேஃபா கோப்பை கால்பந்து ஆகியவற்றுக்குப் பிறகு பெரிய கால்பந்து போட்டியாகக் கருதப்படுவது ஈரோகோப்பைக் கால்பந்துப் போட்டி.
உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ளும் பல ஐரோப்பிய அணிகள் இந்த யூரோ கோப்பைக் கால்பந்து போட்டியிலும் கலந்து கொள்கின்றன.ஏறக்குறைய ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இதில் கலந்து கொள்கின்றன.
சுமார் 250-க்கும் அதிகமான ஆட்டங்கள் நடைபெற உள்ளன. யூ-ரோ கோப்பையை வெல்லும் அணிக்கு உலகக் கோப்பையை வென்றதற்கு ஈடானபெருமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பைக் கால்பந்து, யுயேஃபா கோப்பைக் கால்பந்து ஆகியவற்றுக்கு அடுத்து அதிக பரிசுத் தொகை கொண்டதும் இந்த யூரோ கோப்பைக்கால்பந்துப் போட்டிதான்.
பல முன்னாள் உலக சாம்பியன்கள் மற்றும் யூ-ரோ கோப்பைச் சாம்பியன்கள் எல்லாம் இந்த முறை -யூரோ 2000 கோப்பையை வெல்ல அதிகஆர்வத்துடன் உள்ளன. ஸ்பெயின் நாடும் கோப்பையை வெல்ல தயாராக உள்ளது.
அந்த அணி -யூரோ-2000 கோப்பையை வென்றால் அணியின் 22 வீரர்களுக்கும் தலா ரூ.1.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அந் நாட்டு கால்பந்துச்சங்கம் அறிவித்துள்ளது.
அணியை கோப்பையை வெல்லும் வகையில் சிறப்பாகப் பயிற்சி அளித்தால், அணியின் பயிற்சியாளர் ஜோஸ் அந்தோணியோ கமாசோவுக்கு மட்டும் ரூ.2.24கோடி வழங்கப்படும். ஸ்பெயின் கடைசியாக 1964-ம் ஆண்டு ஈரோ கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்ளுக்கு முன் சாம்பியன் லீக் போட்டியில் கோப்பையை வென்றதற்குக் கிடைத்த பரிசுத் தொகையை விட தற்போது அறிவித்துள்ள தொகைகுறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதாக அணியின் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் கால்பந்து சங்கத்தின் இந்த அறிவிப்பு அணியில் உள்ள சில வீரர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை அளித்துள்ளது. ஏனெனில், சமீபத்தில் நடந்து முடிந்தயுயேஃபா கோப்பைக் கால்பந்துப் போட்டியில் சில கிளப்புகளுக்காக விளையாடிய ஸ்பெயின் அணி வீரர்களுக்கு நிறைய பணம் பரிசுத் தொகையாக கிடைத்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஈரோ கோப்பையை வென்றால் மேலும் அதிக பரிசுத் தொகை அவர்களுக்குக் கிடைக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications