ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
தாய்லாந்-தில் புலிகளுக்காகக் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் பறிமுதல்
பாங்காக்:
விடுதலைப் புலிகளுக்காக தாய்லாந்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிறிய நீர்மூழ்கிக் கப்பலை தாய்லாந்து நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல்செய்துள்ளனர்.
தாய்லாந்தில் புகெட் தீவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு இக் கப்பல் கட்டப்பட்டு வந்தது. பாதி கட்டப்பட்டுள்ளநிலையில் இக் கப்பலை தாய்லாந்து அதிகாரிகள் கடந்த ஏப்ரலில் கண்டுபிடித்தனர்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழரான கிறிஸ்டி ரெஜினால்ட் லாரன்ஸ் என்பவருக்குச் சொந்தமானது அந்த கப்பல் தளம். விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவிசெய்துவருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவரை கடந்த ஏப்ரல் மாதமே தாய்லாந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். லாரன்ஸுக்கும்கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருப்பது அப்போது தெரியவந்தது.
அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் கப்பல் கட்டும் தளத்தில் புதிய நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டு வந்ததைத் தாய்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.கப்பலைக் கண்டுபிடித்தபோது, கப்பல் தளத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அங்கு கடத்தல் பொருட்கள் ஏதும் இல்லை. ஆனால்,புலிகளுக்கு ஆதரவான ஆவணங்கள், ராடார், சோனார் போன்ற நவீன ஆயுதங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
புகெட் தளத்தில் புலிகளுக்கு கப்பல் கட்டப்பட்டதே தவிர, அத் தளத்துக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு புலிகளின் நடமாட்டம் ஏதும்இல்லை என்று தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சூரின் பிட்சுவான் தெரிவித்தார்.
எங்கள் நாட்டை தங்களது நடவடிக்கைக்கு ஒரு தளமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எங்கள் நாட்டைச்சுற்றிலும் பலத்த கண்காணிப்பும், காவலும் போடப்பட்டுள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications