ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
சென்னை:
செக்கோஸ்லோவேகியா போல் -இ-லங்-கை-யைப் பிரிப்பது தமி--ழர்-கள் பிரச்சினைக்குத் தீர்வாகாது. அந்நாட்டின் இறையாண்மையைக் காக்கும்வகையில் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பதே சரியான தீர்வாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் தெரிவித்தார்.
இலங்கை பிரச்சனை பற்றி சென்னையில் புதன்கிழமை மூப்பனார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி: செக்கோஸ்லோவேகியா நாட்டின் அடிப்படையில் இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளாரே?
பதில்: செக்கோஸ்லோவேகியாவை இலங்கை பிரச்சனையுடன் ஒப்பிட முடியாது.
கே: மனிதாபிமான அடிப்படையில் இலங்கையைப் பிரித்துத் தரலாம் என்று கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளாரே?
ப: மனிதாபிமான அடிப்படையில் ஒரு நாட்டைத் துண்டாடுவது எப்படித் தீர்வாகும்?
கே: சரி இலங்கைப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்கிறீர்கள்?
ப: நான் ஒரு இந்தியன். என் நாட்டின் இறையான்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைப்பேன். அதேபோல் இலங்கையில் உள்ளவர்களும்நினைப்பார்கள். எனவே அங்குள்ள தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து, அந்நாட்டின் இறையாண்மையை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் தீர்வாகும்.
கே: 1989 ல் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்கிறீர்களா?
ப: அதைவிட கூடுதலான அதிகாரங்கள் கூட தரலாம்.
கே: இப்பிரச்சனையில் இந்தியா தலையிட்டு சமரசம் பேச வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?
ப: இந்தியா தலையிடவும் கூடாது. சமரசம் பண்ணவும் கூடாது.
கே: மதிமுகவும், பாமக யும் டெல்லியில் மத்திய அரசுடன் ஒத்துப் போய் விட்டு தமிழகத்தில் புலி ஆதரவு குரல் கொடுக்கின்றனவே... என்னகாரணம்?
ப: இது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும். அதனால் டெல்லியில் எதிர்த்துப் பேச மாட்டார்கள்என்-று மூப்பனார் கூறி-னார். பேட்டியின் போது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடனிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications