தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதராக கோபால கிருஷ்ண காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தூதராக இருந்த சிவசங்கர மேனன், சீனத் தூதராக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த விஜய் நம்பியார், பாகிஸ்தான் தூதராகநியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தி, குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் செயலாளராக இருந்துவந்தார். 1978ம் ஆண்டு முதல் 82 வரை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் முதல் நிலை செயலாளராக பணியாற்றினார். அதன்பின்னர் இந்தியாவுக்கான துணைத் தூதராக தென்னாப்பிரிக்காவில் பணி புரிந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் கடும் சண்டை, கொழும்பில் அமைச்சர் உள்பட 22 பேர் மனித வெடிகுண்டுக்குப் பலியானது எனஇலங்கையில் பெரும் சிக்கலான சூழ்நிலை நிலவிவரும் வேளையில் புதிய தூதர் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications