For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்"- நிர்-ம-லா சு-ரேஷ்

By Staff
Google Oneindia Tamil News

பெண் சுதந்திரம் பற்றி, தீர்மானமாக திட்டவட்டமான வரையறுத்த கருத்தைச சொல்ல முடியாது.ஒவ்வொரு நாடுகளுக்கு தகுந்தபடி அங்குள்ள சுற்றுச்சூழல், கலாச்சாரங்களுக்கு தகுந்தபடி பெண்சுதந்திரம் என்பது மாறுபடும். மிக அதிகமான கட்டுப்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் என்றுபெண்களை கட்டிப்போடும் நாடுகளளில் சீனாவும, ஜப்பானும் முதலிடம்.இந்தியாவை விட சீனாவி-லும்,ஜப்பா-னி-லும் பெண் அடிமைத்-த-னம் என்கிற மனோ பாவம் அதிகமாகவே இருக்கிறது.தொழில் நுட்பத்தில் முதலிடம் என்று சொல்கிற மாதிரி ஜப்பானுக்-கு பெண் அடிமைத்தனத்தி-லும்மு-த-லி-டம் தான்.

இந்தியாவைப் பொருத்தவரை மூன்று நிலைகள் இருக்கின்றன. மிகவும் ஏழ்மையானவர்கள், நடுத்தரவர்க்கம், பணக்காரர்கள். இந்த மூன்று வர்க்கத்திலுமே அவரவர் பொருளாதார சூழ்நிலைக்குஏற்ப ... பெண்கள் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். பொருளாதார நிலைக்குத் தகுந்தாற்போல்வரதட்சனை கொடுமை, சுதந்திரம் என்பது மாறுபடுகின்றதே ஒழிய அந்த அடிமை வாழக்கையில்மாற்ற்ம் ஏதுமில்லை.


அர-புக் கதை-க-ளுக்-கு ஆரத்-தி நூல்
வெளி-யீட்-டு வி-ழா-வில் (இட-மி-ருந்-து)
-நிர்-ம-லா-வின் கண-வர் சு-ரேஷ்,
து--பாய்க்-கா-ன இந்-தி-யத் தூதர்
ஜே.கே. கு-ரா-னா, நிர்-ம-லா சு-ரேஷ்,
து-பாய் து-றை-மு-கத்-தின் டைரக்-டர்
ஜென-ரல் ஹிசாப் கானம்.
கிராமங்களில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும்..அடிமை வாழ்க்கையிலிருந்துவெளிவர இன்னும் அவர்களுக்கு வழி தெரியாத சூழ்நிலையே இருக்கிறது, ப-ணக்கார வர்க்கத்தில்,அவர்களுடைய பொருளாதார நிலை... பெண்களின் பிரச்சனை அடிமை வாழக்கை வெளியே தெரியாமல்பாதுகாக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கம் - இந்த நிலையில் உள்ள பெண்களின் நிலைதான் பரிதாபமானது.-கு-டும்பத்தைக் காக்க
பொருளாதார ரீதியாகவும் அவர்கள் போராட வேண்டும்.உழைத்துப் பொருளை ஈட்டி வந்த பிறகு, வீட்டில் கணவனின் கட்டுப்பாட்டிற்குள் அடிமை வாழ்க்கைவாழவும் வேண்டும். இரட்டைச் சிலுவைகளை சுமக்கும் பெண்கள். பாலைவன வாழ்க்கை அது.

இது இயல்பான ஒரு சூழ்நிலை என்றால் .. தனி மனித வாழ்விலும் பெண்களுக்கு நிம்மதியில்லை. வீதியில்தன்னுடன் பணி புரிபவரிடமோ, நண்பரிடமோ சகஜமாக பேசினால் கூட - செக்ஸூவலாக இதை இணைத்துபேசுவது பல பெண்களை முடங்க வைத்து விடுகிறது. பெண்களுக்கென்று உரிய மரியாதை அந்தஸ்துஎன்பதுதான் என் கருத்து, அரசியல், இலக்கியம், சினிமா, நிர்வாகம் இப்படி எந்தத்த துறையைஎடுத்துக் கொண்டாலும் ப்ெண்களை .. ஒரு நில்ைக்கு அதாவது ஆண் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுகின்றநிலையைத் தாண்டி வர விடுவதில்லை என்பது உண்மை.

இந்தியாவில் உள்ள அரசிய்ல சூழ்நிலைக்கும், அயல் நாடுகளில் உள்ள அரசியல சூழ்நிலைக்கும் நிறையவேறுபாடு இருக்கிறது. தேர்தல் என்றால் ஓட்டு சேகரிப்பு என்பது இங்கே ரோடு ரோடாக , வீடுவீடாக ஏறி இறங்க வேண்டும். நேரம் காலம் இல்லாமல் உழைக்க வேண்டும் என்கிற நிலை.அயல் நாடுகளில் மீடியா காம்பைன் தான் எல்லாமே டி.வியில், கம்ப்யூட்டரில் என்று அசத்துகிறார்கள்.உடல் உழைப்பு என்பதை விட சிந்தனைக்கே அதிக இடம். ஆகையினால்தான், இந்தியாவைவிட மற்றநாடுகளில் அரசியலில் பெண்களின் நிலை சற்று உயர்வான நிலையிலேயே இருக்கிறது.

இவ்வளவு இருந்தாலும்.. பெண்கள் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதனை புரிகிறார்கள்.சந்தோஷமான விஷயம்தான். ஒரு மிக உயர்ந்த இடத்திற்கு, நிலைக்கு முயற்சி செய்கின்ற எந்த பெண்ணும்character damaging என்கிற கொடூரமான வக்கிரமான தடையை தாண்டியாக வேண்டும்என்கிற கட்டத்தில்தான் இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X