தமிழகத்தில் இன்று
பொருளாதாரத் தடையை நீக்-கக் கோ-ரு-கி-ற-து ஈராக்
நியூயார்க்:
ஐ.நா. விதித்துள்ள, பொருளாதாரத் தடையால், புற்றுநோய், ரத்தசோகை, கழலை, கருச்சிதைவு, மஞ்சள் காமாலை போன்றவற்றால் பாதிக்கப்படும்பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஈராக் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஈராக் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரத் துறை அமைச்சர் சதீ அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையில் வியாழக்கிழமை பேசுகையில் இவ்வாறுதெரிவித்தார்.
அவர் பேசுகையில், புற்றுநோய், குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பது, ரத்த சோகை, தைராய்டு சுரப்பு குறைவால் கழலை, கருச்சிதைவு, மஞ்சள்காமாலை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவை பெண்கள், குழந்தைகளிடையே அதிகரித்து விட்டது.
ஈராக்கைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளின் பெயரால் ஐ.நாவுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். தயவு செய்து,பொருளாதாரத் தடையைவிலக்கிக் கொள்ளுங்கள். உங்களது மனிதாபிமான பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள். தடையை நீக்குவதன் மூலம் அப்பாவித்தனமாக இறக்கும்பல உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்றார் அவர்.
ஈராக்கில் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும் பொதுமக்களைக் காப்பதற்காக, எண்ணைய்க்குப் பதில் உணவு என்ற திட்டத்தை 1996-ம்ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அனுமதித்தது. இதன்படி ஐ.நா. கண்காணிப்பின் கீழ், பெட்ரோலியப் பொருட்களை விற்று அதற்குப் பதில் உணவு போன்றஅத்தியாவசியப் பொருட்களை ஈராக் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் இந்தத் திட்டத்தை, ஐ.நா. சபை நீடிக்கும்.
ஏழாவது திட்டக் காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிகிறது. இதை நீடிப்பது தொடர்பான விவாதம் ஐ.நா. சபையில் நடந்து வருகிறது. தற்போதுநீட்டிக்கப்படவுள்ள திட்டத்தில் புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கான கருவிகளை வாங்கிக் கொள்ளஈராக்கிற்கு அனுமதி அளிக்க இந்த அம்சம் வகை செய்கிறது.
திட்ட நீட்டிப்புக்கான தீர்மானத்தை இங்கிலாந்தும், பிரான்ஸும் கொண்டு வந்துள்ளன.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications