தமிழகத்தில் இன்று
"புலி"க்கு சவால் விடும் "டிராகன்"
டெல்லி:
உலக வர்த்தக கழகத்தில் சீனா உறுப்பினராகியுள்ள நிலையில், வர்த்தகத் துறையில்இந்தியா கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராகியுள்ளன் மூலம் வர்த்தகத்தில சிலகட்டுப்பாடுகள், ஒழுங்குகளை சீனா கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும்,இந்தியாவுக்குக் கடும் போட்டியாக சீனா விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மருந்துத் துறையில் முன்பு இந்தியாவுக்கு மிகவும் பாதகமான வகையில் சீனாவின்வர்த்தகம் இருந்தது.
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக உலகிற்கு முன்பு இந்தியா போன்ற சாதாரணபொருளாதார பின்னணி கொண்ட நாடுகள் நிச்சயம் போராட வேண்டியதிருக்கும்.இவையெல்லாவற்றையும் விட சீனாவின் பொருளாதார அணுகுமுறை முன்இந்தியாவின் பொருளதாரம் மிகச் சாதாரணமாக உள்ளது.
ஆசிய பசிபிக் பொருளாதார கழகத்தில் சீனா உறுப்பினராக உள்ளது. ஆனால் இதில்உறுப்பினராக இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயேமுடிந்துள்ளது.
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அபரிமிதமான வரவேற்பு உள்ளது. சீனாவில்தயாரான பொருட்கள், அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளை நிறைத்துக்கொண்டுள்ளன.
இந்தியாவை விட சீனாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள்அதிகம் என்று கூறப்பட்டாலும் கூட, இந்தியாவை விட சீன வர்த்தகம் உச்சகட்டத்தில்உள்ளது. 1998-ல் சீனாவில் வெளிநாட்டு முதலீடு 27.40 சதவீதமாக இருந்தது. ஆனால்இந்தியாவில் 1.36 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே கிடைத்தது.
உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராக இல்லாதபோதே சீனா தனது ஆதிக்கத்தைசெலுத்தி வருகையில், தற்போது உறுப்பினராகியுள்ளதன் மூலம் இந்தியாவுக்கு பெரும்போட்டியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2005-ம் ஆண்டுக்குள் வர்த்தக கட்டணத்தை 9 சதவீதமாக குறைக்கப் போவதாக சீனாஅறிவித்துள்ளது. தற்போது சராசரியாக இது 24 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இது20 சதவீதமாக இருக்கிறது. எனவே 9 சதவீதமாக சீனா வர்த்தகக் கட்டணத்தைக்குறைத்தால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பாக அது அமையும். எனவே இப்போதேவிழித்துக் கொள்வது இந்தியாவுக்கு நல்லது.
ஏற்றுமதிக்கான உரிமங்கள் மற்றும் ஒதுக்கீட்டு முறையை அறவே நீக்கப் போவதாகசீனா உறுதியளித்துள்ளது. தற்போது சீனாவில் உள்ள வெளிநாட்டு வங்கிகள், உள்ளூர்நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு சீன கரன்சியை கடனாக வழங்குவதற்குஅனுமதி இல்லை. இதை மாற்றவும் சீனா திட்டமிட்டுள்ளது.
இதேபோல, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது சிறு வர்த்தகத்தையும்,விநியோகத்தையும் சீனாவில் மேற்கொள்ள தடை உள்ளது. இதையும் தளர்த்த சீனாதிட்டமிட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறையிலும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர சீனா முடிவுசெய்துள்ளது. தற்போது சீனாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளில் 74 சதவீதம்,வெளிநாடு வாழ் சீனர்களால் மேற்கொள்ளப்படுவதாகும்.
மொத்தத்தில் வெளிநாட்டு முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கத்திலேயேசீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. எனவே இதை சமாளிக்கும்வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருந்தால் மட்டுமே வர்த்தகத்தில் சீனாவை,இந்தியாவால் சமாளிக்க முடியும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications