தமிழகத்தில் இன்று
சசிகலா குடும்பத்துக்கு உதவுவது எனது கடமை...உருகுகிறார் ஜெ.
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தஞ்சாவூர்:
சோதனையிலும், துன்பத்திலும் என் உடன் கரங்கோர்த்து நடக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்குஆதரவாக இருப்பதிலும், அவர்களுக்கு சோதனைக் காலங்களில் உதவி செய்வ எனது கடமை என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தஞ்சையில் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் கிருஷ்ணப்பிரியாவுக்கும், இன்ஜினியர்கார்த்திகேயனுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. திருமணவிழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதாபேசியதாவது:
ஜெயராமன் முன்னின்று நடத்த வைக்க வேண்டிய திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன். தனிப்பட்டநிலையிலும் சரி. அரசியல் வாழ்க்கையிலும் சரி. என்னை நம்பி வந்தவர்களை நான் ஒரு போதும் கைவிடமாட்டேன். அவர்களை நிராதரவாக விட்டுவிடக் கூடாது என்பதே என் லட்சியம். அந்த நெறிப்படி இந்தத்திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.
ஜெயராமன் 1991 ம் ஆண்டு நான் பர்கூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோது அங்கேயே முகாமிட்டுதொகுதிப் பணிகளை சிறப்பாய் மேற்கொண்டவர். பின்னர் தொகுதிப்பணி முடிந்து எனது இல்லப் பணிகளைக்கவனிப்பதற்காக ஹைதராபாத் சென்ற போது அவர் மரணமடைந்து விட்டார்.
அன்றுமுதல் அவரது குடும்பத்தை எனது பாதுகாப்பில் கவனித்து வருகிறேன். அது நடந்து 9 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் அச்சம்பவம் என் கண்ணை விட்டு அகலவில்லை.
சசி குடும்பத்திற்கு உதவுவதில் மகிழச்சி: அவரது மூத்த மகள் கிருஷ்ணப்பிரியாவுக்குத்தான் திருமணம்.சோதனையிலும், துன்பத்திலும் என்னுடன் கரங்கோர்த்து நடக்கும் அவர்களுக்கு உதவி செய்வதிலும், ஆதரவாய்இருப்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு வேண்டியவர்கள் என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக பல அவமானங்களையும், அவதூறுகளையும்அனுபவித்து வந்தவர்கள் எனது சகோதரி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார். பழிவாங்கும் நடவடிக்கையால்அத்தனை அவமானங்களையும் எனக்காகவும், இயக்கத்துக்காகவும் சகித்து வந்தவர்கள் அவர்கள். அவர்களுக்குஆதரவாக இருப்பதில் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன்.
இந்த மணமக்கள் மல்லிகையும் மணமும் போல், கண்ணும் இமையும் போல், ஜாடியும் மூடியும் போல், சூரியனும்ஒளியும் போல் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்? -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications