தமிழகத்தில் இன்று
ஜெய-ல-லி-தா-வின் -க-தைக்-கு க-ரு-ணா-நி-தி-யின் பதில் கதை
சென்னை:
நடந்த சசிகலா குடும்பத் திருமண விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைக்கு, சென்னையில் நடந்த அமைச்சர் ஆற்காடுவீராசாமி குடும்பத் திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி பதில் கதை சொன்னார்.
சசிகலா அண்ணன் மகள் திருமணத்தை தஞ்சாவூரில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். அப்போது அவர் "கணவன் மனைவிஒற்றுமையை விளக்க தாத்தா பாட்டி பல்செட் கதை ஒன்றை கூறினார்.
சென்னையில் திங்கள் கிழமை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தம்பி மகன் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா சொன்ன கதைக்கு பதில் கதை சொன்னார்.
முதல்வர் பேசியதாவது:
இப்போது தம்பதிகள் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றி ஒரு உபதேசமே செய்யப்பட்டுள்ளது. இன்று காலையிலேபத்திரிகைகளிலே பார்த்தேன். "பல்செட் உபதேசம். ஒரு கணவனும், மனைவியும் ஓட்டலுக்கு வந்து சாப்பிடுகிறார்கள்.
ஒரு தோசை கேட்டு வாங்குகிறார்கள். அதை கணவன் இரண்டு பாதியாக வெட்டுகிறான். பக்கத்திலே உள்ளவன் ஏன் இரண்டாகதுண்டிக்கிறாய் என்று கேட்கிறான்.
எனக்குப் பாதி, என் மனைவிக்கு பாதி என்று கணவன் கூறுகிறான். அதற்குப் பிறகு பாதியை எடுத்து கணவன் சாப்பிடுகிறான்.மனைவி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பக்கத்திலே இருந்த வாலிபன் அந்த அம்மையாரைப் பார்தது என்னம்மா, கணவர் சாப்பிடுகிறாரே, நீங்கள் சாப்பிடவில்லையா?என்று கேட்கிறான். நான் பிறகு சாப்பிடுவேன் என்கிறார்.
ஏன் என்று கேட்டபோது, இரண்டு பேருக்கும் ஒரேயொரு பல் செட் தான் இருக்கிறது. அதை இப்போது கணவர் மாட்டிக் கொண்டுசாப்பிட்டுக் கொண்டிருக்கிறார், அவர் சாப்பிட்டு முடிந்த பிறகு அந்த பல் செட்டை வாங்கி நான் மாட்டிக் கொண்டு பிறகு தான்சாப்பிடுவேன் என்கிறார்.
இதை ஆராய்ந்து பார்த்தால் இந்த கற்பனைக்கே இடம் இருக்காது. ஏனென்றால் ஒரே பல் செட் இரண்டு பேருக்கும் பொருந்துமாஎன்பது வேறு. டாக்டர்களுக்கும் தெரியும். ஒரு பல் செட் இரண்டு பேருக்குப் பொருந்துவது மிகவும் சிரமம்.
அப்படியே பொருந்துவதாகவே வைத்துக் கொண்டால் கூட, கணவன் மனைவி ஆகிய இருவரிலே யார் முதலில் சாப்பிடுவதுஎன்ற அந்த எண்ணம் வரும்போது, அதிலே ஆண் ஆதிக்கம் தான் மிகுந்திருப்பதை காண்கிறோம். மனைவி பொறுத்துக் கொண்டுகணவன் சாப்பிட்டு முடிந்து பல் செட் வருகிற வரை அமர்ந்திருக்கிறாள். இது இன்று காலையில் நான் படித்த கதை.
ஆனால், நம்முடைய இலக்கியங்களில் எப்படி இருக்கிறது என்று சொன்னால் சங்க இலக்கியங்களில் கலித்தொகையில் ஒருபாட்டு உண்டு. ""துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின் உண்ணுங் களிறெனவும் உரைந்தனரே என்பதுபாடல்.
ஒரு யானை தன் பெண் யானையோடும், குட்டி யானையோடும் சென்று கொண்டிருக்கிறது.
இது கலித் தொகைக் காட்சி. அப்போது அந்தக் குட்டி யானை அங்கே தேங்கியிருந்த கொஞ்சத் தண்ணீரை கலக்கி விட்டுவிடுகிறது. இரண்டு யானைக்கும் தாகம். அந்த நிலையில் கொஞ்சமாக உள்ள அந்தத் தண்ணீரை யார் குடிப்பது என்ற நிலைவரும்போது, ஆண் யானை அந்த தண்ணீரை தான் குடிக்காமல், தன்னுடைய பெண் யானையைக் குடிக்கச் சொல்லி விட்டு அதற்குபிறகு தான் எஞ்சிய தண்ணீரைக் குடிப்பதாகச் சங்கப் புலவன் கலித் தொகையில் எழுதியிருக்கிறான்.
பெண்ணைச் சாப்பிடச் சொல்லி விட்டு, ஆண் காத்திருப்பது தமிழனுடைய இலக்கியம். ஆண் முதலில் சாப்பிட்டு விட்டு பெண்பிறகு சாப்பிட வேண்டுமென்று கூறுவது அதற்கு மாறுபட்ட கதை. இதற்கு மேல் நான் விளக்க விரும்பவில்லை என்றார் முதல்வர்கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications