தமிழகத்தில் இன்று
இ-லங்-கைக்-கு இந்-தி-ய ரா-ணு-வம் -செல்-லா-து: ஜார்ஜ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கை பிரச்னையில் மத்திய அரசு எடுத்துள்ள நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்தெரிவித்தார்.
சென்னை அருகே ஆவடியில் உள்ள ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னைவந்துள்ளார். டெல்லியில் இருந்து செவ்வாய் கிழமை காலை 9.30 மணி விமானத்தில் சென்னை வந்த அவரை, சென்னையில் உள்ள ராணுவத் தளபதிகள்,கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் பெர்ணான்டஸ். அப்போது அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கை பிரச்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனவே?
பதில்: இப்பிரச்னையில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுத்துள்ளது. அதைப் பற்றி தான் நான் கருத்து சொல்ல முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்உள்ள சில கட்சிகள் பேசுவது பற்றியெல்லாம் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், இப்பிரச்னையில் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும்இல்லை என்பதை மட்டும் என்னால் தெளிவுபடுத்த முடியும்.
கேள்வி: இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார். அந்த முடிவில் ஏதாவது மாற்றம் உண்டா?
பதில்: எந்த மாற்றமும் இல்லை. இலங்கைக்கு ராணுவம் அனுப்பப்படமாட்டாது.
கேள்வி: பிறகு எதற்காக இந்திய விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது?
பதில்: அது வழக்கமான ஒன்று தான். அதற்கு எந்த விசேஷ காரணம் இல்லை. பக்கத்து நாடுகளில் போர் நடைபெறும் சூழ்நிலையில் நமது படையினர் உஷார்நிலையில் வைப்பது என்பது வாடிக்கையான ஒன்று.
கேள்வி: சென்னை வந்துள்ள நோக்கம்...?
பதில்: ஆவடி டாங்க் தொழிற்சாலை விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். வேறு எந்த விசேஷ காரணம் இல்லை என்றார் பெர்ணான்டஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications