தமிழகத்தில் இன்று
ஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கத் தடை: கருத்துக் கூற மூப்பனார் தயக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அப்பீல் செய்திருந்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதலைமைத் தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் தெரிவித்த கருத்து பற்றி பதில் சொல்ல மூப்பனார் மறுத்து விட்டார்.
சென்னையில் இரண்டு நாட்களாக முகாமிட்டு, அடுத்தாண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்குறித்து கில் ஆலோசனை நடத்தினார். அரசுத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர்களுடன்அவர் தொடர் ஆலோசனை நடத்தினார்.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார்.தேர்தல் பிரச்சாரத்தின் போதும், ஓட்டுப்பதிவின் போதும் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசியல்கட்சித் தலைவர்களிடம் அவர் கருத்துக் கேட்டார்.
தேர்தல் பிரச்சார நேரத்தை தினம் இரவு 10 மணி வரை என்றிருப்பதை 11 மணியாக உயர்த்த வேண்டும் என்றும்,எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் கள்ள ஓட்டுக்கள் அதிகம் போடப்படுவதால், அந்த முறையை மாற்றவேண்டும், தேர்தல் நடைபெறும் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை கவர்னர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும்பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வெள்ளிக்கிழமை காலையில் எம்.எஸ்.கில்லை, தமாகா தலைவர் மூப்பனார், பீட்டர் அல்போன்ஸ் எம்.பி.ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்கள் மூப்பனாரை சந்தித்தனர்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
கேள்வி: வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அப்பீல் செய்திருந்தாலும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதேர்தல் ஆணையாளர் யோசனை தெரிவித்துள்ளாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: என்னுடைய கருத்தை பெற்று அரசாங்கத்திடம் நீங்கள் சொல்ல விரும்புகிறீர்களோ. சொல்ல மாட்டேன்.
கேள்வி: தேர்தல் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை கவர்னர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற யோசனை பற்றி...?
பதில்: நல்ல யோசனை. எதிர்க் கட்சிகள் எல்லாம் இதை வரவேற்பார்கள். ஆளும் கட்சியினர் எதிர்ப்பார்கள்என்றார் மூப்பனார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications