நான் விலக மாட்டேன்: அஸாருதீன் பிடி-வா-தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹைதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலக மாட்டேன் என்று முன்னாள் கேப்டன்அஸாருதீன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளநீதிபதி கிங் கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலத்தில், இந்திய வீரர் அஸாருதீன்தான்,கிரிக்கெட் புக்கி ஒருவரை தனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடமிருந்து பணம்வாங்கினேன் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்குரேனியே வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அஸாருதீன் அணியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைவலுத்தது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் தின்சா வெள்ளிக்கிழமைகூறுகையில், தார்மீகப் பொறுப்பேற்று, தன் மீதான புகார் தவறென்று நிரூபிக்கப்படும்வரை அஸாருதீன் அணியிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அணியிலிருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அஸாருதீன்திட்டவட்டமாக கூறியுள்ளார். அஸாருதீன் கூறுகையில், குரோனியே அவ்வப்போதுதனது நிலையை மாற்றிப் பேசி வருகிறார். இப்படிப்பட்ட நபரின் அறிக்கையைப்பெரிதாகக் கருதி, அமைச்சர் தின்சா எப்படி நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுகூறலாம்?
குரோனியேவின் புகாருக்கு ஆதாரம் எதையும் அமைச்சர் வைத்துள்ளாரா?
நான் சிறுபான்மை இனத்தவன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை ஓரம் கட்ட முயற்சிநடக்கிறது. கிரிக்கெட் எனது மூச்சு. எனது வாழ்க்கை. எனது கொள்கை. அதை விடுவதுஎன்ற பேச்சுக்கே இடமில்லை.
இதேபோல, கபில்தேவும் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்று ஒரு பத்திரிகை ஆசிரியர், தனியார் தொலைக் காட்சியில் கூறியதுவேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
விசாரணை ஏதும் வைக்காமலேயே ஒருவரைத் தண்டிப்பது, அவருக்கு நிரூபிப்பதற்குவாய்ப்பு தராதது மிகவும் கண்டிக்கத்தக்கது. கபில்தேவை ராஜினாமா செய்யச்சொல்லும் பத்திரிகை ஆசிரியர், சட்டம் தெரியாதவராக இருக்கலாம். தவறுநிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றவாளி என்று கூற முடியாது என சட்டம்கூறுகிறது. இதை அந்த ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அஸாருதீன்.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications