மேட்ச் பிக்ஸிங்: லேட்டஸ்ட் வீரர் லாரா...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு போட்டியில் மோசமாக விளையாடுவதற்காக பணம்பெற்றதாக தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவர் கூறியுள்ளதை, மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா மறுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் நேட்டால் விட்னஸ் பத்திரிகையில் இதுதொடர்பான செய்திவெளியாகியுள்ளது. அதில் பேட்டி கொடுத்திருந்த தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத ஒரு தொழிலதிபர் கூறுகையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1993-ம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஒரு போட்டியில்மோசமாக விளையாடுவதற்காக தன்னிடமிருந்து 3000 டாலர் பணம் வாங்கியதாகஅவர் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை தற்போது லாரா மறுத்துள்ளார். லண்டனில் தற்போது மேற்கு இந்தியத்தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அணி மேலாளர் ரிக்கி ஸ்கெர்ரிட்விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென் ஆப்பிரிக்க பத்திரிகைச் செய்தியில்உண்மையில்லை என்று லாரா கூறியுள்ளார். இந்தப் புகாரையும் அவர் மறுத்துள்ளார்என்றார்.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கத் தொழிலதிபரின் புகார், சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலுக்கு அனுப்பப்படும் என்று ஐக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியநிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் பிரெளனின் வில்கின்சன் கூறுகையில்,இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிலதிபர் எங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைப்போம்.
மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரித்து வரும் கிங் கமிஷனுக்கும் அனுப்பி வைப்போம்என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications