இலங்கையின் கனவைத் தகர்த்த பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பிலுள்ள காலி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், நான்காவது நாளானசனிக்கிழமை, பாகிஸ்தான் வெற்றி வாகை சூடியது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சிறப்பாக பந்துவீசி 5விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

முன்னதாக, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய இலங்கை 123 ரன்களுக்குள்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது.வாசிம் அக்ரம் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைப் பறித்தார்.

அணியில் யாருமே பெரிய ஸ்கோரை எட்டவில்லை. பாகிஸ்தான் அணியின்வேகப்பந்துவீச்சுக்கு முன் இலங்கை வீரர்களால் தடுப்பு ஆட்டத்தில் மட்டுமே ஈடுபடமுடிந்தது.

அட்டப்பட்டு 40 ரன்களில் வீழ்ந்தார். இதுவே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.அரவிந்த டிசில்வா (21), வாஸ் (20), சொய்சா (13) ஆகியோர் சொல்லிக் கொள்ளும்படிரன்கள் எடுத்த பிற வீரர்கள்.

வாசிம் அக்ரம் 5 விக்கெட்டுகளையும், அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

131 ரன்களே தேவை என்ற நிலையில், ஆட்டத்த்ை தொடங்கிய பாகிஸ்தானுக்குஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சயீத் அன்வர் 6 ரன்களுடனும், யுஹானா 11ரன்களுடனும் வெளியேறினர்.

முகம்மது வாசிம் 30 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வாசிம் அக்ரமும், யூனிஸ் கானும்நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இருவரும் ஆட்டம்இழக்காமல் முறையே 20, 32 ரன்கள் எடுத்தனர்.

யூனிஸ்கான், முரளிதரன் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.

முரளிதரன் 3 விக்கெட்டுகளையும், சொய்சா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கையின் சோகம்:

இலங்கை அணிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெற்று விட வேண்டும் என்ற ஆசையுடன் அந்த அணி விளையாடியது. ஆனால்இலங்கையின் கனவைத் தகர்க்கும் விதத்தில், பாகிஸ்தான் அபாரமாக ஆடி தனதுதிறமையை நிரூபித்துள்ளது.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+