தமிழகத்தில் இன்று
மதுரை விவசாயிகள் மாநாட்டுக்கு சிறப்பு ரயில் விடக் கோரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:
மதுரையில் ஜூன் 24-ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்காகசிறப்பு ரயில் விட வேண்டும் என்று கர்நாடக மாநில விவசாய சங்கத் தலைவர் நஞ்சுண்டசாமி கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐரோப்பாவில் உள்ள நாடுகள், விவசாயிகள் மாநாட்டில்கலந்துகொள்ளும் விவசாயிகளுக்காக சிறப்பு ரயில்கள் விடப்படும். பச்சை நிறத்தில் அவை இருக்கும்.
சிறப்பு ரயில் விட முடியாவிட்டால், பிற ரயில்களில் கூடுதல் பெட்டிகளையாவது இணைக்க வேண்டும்.
ரயில்களில் பயணம் செய்வதற்கு விவசாயிகள் கட்டணம் செலுத்துவதில்லை என்று மத்திய ரயில்வே துறைகூறியுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. இலவசமாக பயணம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.
விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் உள்ள இரண்டாவது தலைமுறை விவசாய சீர்திருத்தம்உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மதுரை மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications