தமிழகத்தில் இன்று
டான்சி வழக்கு: ஜெ., சசிக்கு எதிராக
கைது வாரண்ட் - நீதிபதி எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜூன் 23-ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லைஎன்றால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று 3-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கியதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்புஏற்படுத்தியதாக சசி எண்டர்பிரைசஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்கள் என்றமுறையில் ஜெயலலிதா மற்றும் அவரது நெருங்கிய தோழி சசிகலா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஜெ., சசி தவிர முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசீப் உள்பட மேலும் 4 பேர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இவ் வழக்கு விசாரணை 3-வது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ் வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஜூன் 23-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில்ஆஜராகவேண்டும். அன்றைய தினம் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அன்பழகன்அறிவித்திருந்தார்.
ஆனால், தமிழகம் முழுவதும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவேண்டியுள்ளது. அதனால், ஜூன் 23-ம்தேதி விசாரணைக்கு வரமுடியாது. ஆகவே, வேறு ஒரு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்கவேண்டும் என்று ஜெ.,சசி இருவரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம் மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
மனுவில் கூறப்பட்டதையே ஜெ. மற்றும் சசிகலாவின் வழக்கறிஞர்கள் மீண்டும் எடுத்துரைத்தனர். ஆனால்,அவர்களது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி அன்பழகன், ஜூன் 23-ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் கட்டாயம்ஆஜராகவேண்டும். நீதிமன்ற நடைமுறைகளை விரைவில் முடிக்க வேணடியுள்ளதால் இருவரும்ஆஜராகவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவேண்டி வரும் என்றுஅறிவித்தார்.
இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேருடைய வழக்கறிஞர்களும் மனுத் தாக்கல் செய்தனர்.விசாரணையைச் சந்திக்கும் மன நிலையில் மனுதாரர்கள் இல்லை. ஆகவே, விசாரணையை வேறு ஒரு தேதிக்குஒத்தி வைக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இம் மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்றுகூறினார்.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications