தமிழகத்தில் இன்று
மாதவன் சென்னைக்கு வந்து விட்டார். இப்போதைக்கு நிரந்தரமாக. கிராண்ட் டேஸ் ஹோட்டலில் வாசம். அலைபாயுதேவுக்குப் பிறகு படங்களும்பாய்ந்து வருகின்றன. ஆலயம், சிங்கீதம் சீனிவாச ராவ், மெட்ராஸ் டாக்கீஸ், சுரேஷ்..என படங்கள் கையில் நிரம்பி வழிகிறது.
அதெல்லாம் விடுங்க. முக்கியமான விஷயத்துக்கு வருவோம். படங்களைத் தவிர வேறு விஷயங்களிலும் மாதவன் பிசியாக இருக்கிறார். "பெண்விசிறிகளைச் சந்திக்கவும் (சத்தியமாக சந்திக்க மட்டும்தான் சார்..), தனது நாயகிகளுடன் ஸ்கிரீன் டெஸ்ட் செய்யவும் அடையாரில் ஒரு பங்களாபிடித்துள்ளார்.
ஒரு படம் ஓடியதற்கே மாதவன் நிலை இப்படியாகி விட்டது. அடுத்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டால்...
அட மாதவா...எங்கேப்பா இருப்பே....?
சரிதா..நீங்க பிரண்டா.. எதிரியா..?
பிரன்ட்ஸ். மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம். இப்போது தமிழ் பேச வருகிறது. நாயகன் விஜய். நாயகி....??.
எஸ்... ஒரே குழப்பம். தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் முன்னாள் கதாநாயகி சரிதா. நடி--கர், நடி-கை தேர்-வைதயா-ரிப்-பா-ளர் சரி-தா-வி-டம் விட்-டுள்-ளார்.
முதலில் நாயகியாக பேசப்பட்டவர் ஜோதிகா. ஆனால் அவரது சம்பளத்தைக் கேட்டு வாய் பிளந்த சரிதா, ஆளை மாற்றி விட்டார்.
அடுத்து வந்தார் சிம்ரன். அவரும் சரிப்படவில்லை சரிதாவுக்கு. சுவலட்சுமிக்கு மாறினார். சில நாட்கள் ஷூட்டிங் முடிந்திருக்கும். அவரையும் மாற்றிவிட்டார். இப்போது தேவயானி, மகேஸ்வரியைப் பார்த்துப் பேசி வருகிறார். யாராவது ஒருவர் நாயகியாகலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு என்றுமட்டும் யாரும் தயவு செய்து கேட்டு விடாதீர்கள். சரிதாவுக்கேக் கூட அது தெரியாது...
"மருமகளுக்குத் துணையாக "மாமியார்...
செல்வமணி வீட்டுக்குப் போய் விட்டார் ரோஜா.
வெயிட்...வெயிட்... கல்யாணமே ஆகவில்லையே. அதற்குள் எப்படி என்கிறீர்களா...நல்ல கேள்வி. கல்யாணம் ஆகவில்லை. ஆனால் கலாட்டா ஆகிவிட்டது ரோஜா வீட்டில். தனது சம்பாத்தியத்தை எல்லாம் சகோதரர்கள் சாப்பிட்டு விட்டதாகவும், தனது கடன் பிரச்சினைகளுக்கு அவர்களேகாரணம் என்றும் அவர்களிடம் சண்டை பிடித்தார். கோபத்தில் காதலரின் வீட்டுக்கு நடையைக் கட்டி விட்டார்.
ஆனால் ரோஜா குடும்பத்தினர் கண்டு கொள்ளவில்லை. திரும்பக் கூட்டி வருவது குறித்தும் முயற்சிக்கவில்லை.
இப்போது, செல்வமணியின் ஷூட்டிங்குகளுக்குப் போகிறார். தனது ஷூட்டிங்குகளுக்கும் செல்வமணி வீட்டிலிருந்தேதான் போகிறார். வெளிப்புறப்படப்பிடிப்புகளுக்கு ரோஜாவுக்குத் துணையாக செல்வமணியின் அம்மா செல்கிறார்.
ஏற்கனவே மந்திராவும் கோபித்துக் கொண்டு, காதலர் அசோக் சாம்ராட் வீட்டிற்குச் சென்றார். அவரது வழியில் இப்போது ரோஜா.
வருங்கால மருமகளுக்குத் துணையாக வருங்கால மாமியார்.
அம்மா வேண்டாம் போ..!
காதலுக்கு மரியாதை புகழ் (இப்போதைக்கு வேறு படம் ஹிட் இல்லையே) நடிகர் விஜய், சென்னையில் இரண்டு கல்யாண மண்டபங்களைக் கட்டியுள்ளார். ஒன்று,நல்ல வசதியுடன் கூடிய, அதி நவீன மண்டபம். இன்னொன்று நடுத்தர மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, கொஞ்சம் சுமாரான வசதியைக் கொண்டது.
முதல் மண்டபத்திற்கு சங்கீதாவின் பெயரை வைத்துள்ளார். இரண்டாவது மண்டபத்திற்கு ஷோபாவின் பெயர். இதில் சங்கீதா மனைவி, ஷோபா அம்மாஎன்று உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications