தமிழகத்தில் இன்று
பிஜி: அரசாங்-கத்-தில் இந்தியர்களுக்-கும்-- இடம் உண்-டு என்கிறார் "கோமா-ளி" ஸ்பீட்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜித் தீவில் அமைக்கப்படவுள்ள அரசில் இந்தியர்கள் இடம் பெற்றால் அதை வரவேற்போம் என்று புரட்சியாளர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்கூறியுள்ளார்.
பிஜித் தீவில் மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் ஆயுதப் புரட்சி நடந்தது. இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி ஆட்சிகவிழ்க்கப்பட்டது. அவரும், பல எம்.பிக்களும், சிறை வைக்கப்பட்டனர். சில நாட்களில் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு ஸ்பீட்டுக்கும்,ராணுவத் தளபதி பைனிமராமாவுக்கும் இடையே பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் இல்லை.
இந்த நிலையில் உலக அளவில் புரட்சியாளர்கள் மற்றும் ராணுவ ஆட்சியாளர்ளுக்கு எதிர்ப்பு வலுத்தது. பக்கத்து நாடுகளான ஆஸ்திரேலியாவும்,நியூசிலாந்தும், பொருளாதாரத் தடை விதிப்பதாக மிரட்டின. இதனால் பயந்து போன பிஜி ராணுவ ஆட்சியாளர்கள், இடைக்கால அரசு விரைவில்அமைக்கப்படும் என்று அறிவித்தனர். தற்போது அந்த அரசில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டால், அதை எதிர்க்க மாட்டோம் என்று ஸ்பீட்கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்பீட் கூறுகையில், புதியஅதிபர் பதவிக்கு வந்த பிறகு அமைக்கப்படும் அமைச்சரவையில் இந்தியர்கள் சேர்க்கப்படலாம். அதற்கானவாய்ப்புகள் உள்ளன. அப்படி நேர்ந்தால் அதை வரவேற்போம்.
புதிய அமைச்சரவையில் நான் இடம் பெற மாட்டேன். கொள்கை ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அது சரியல்ல. புரட்சியையும் நடத்தி விட்டு,அரசுக்குத் தலைமை தாங்கவும் கூடாது. அது தவறு என்றார் ஸ்பீட்.
நியூசிலாந்து தொழிற்சங்கத்தின் தடை அமல்:
இதற்கிடையே, பிஜித் தீவு மீது ஒரு வார பொருளாதாரத் தடையை நியூசிலாந்து தொழிற்சங்க யூனியன் விதித்துள்ளது. இந்த ஒரு வார காலத்திற்கு பிஜிக்குஎந்தவிதப் பொருளும் அனுப்பப்பட மாட்டாது. அதே போல பிஜியிலிருந்தும் எந்தப் பொருளும் பெறப்பட மாட்டாது.
இந்தத் தடையில் நியூசிலாந்து அரசு தலையிடாது என்று அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மார்கரெட் வில்சன் கூறியுள்ளார். தொழிலாளர்கள்சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது என்று 1987-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அரசு மதிக்க வேண்டும் என்றார்வில்சன்.
பிஜித் தீவின் முக்கியத் தொழில் கரும்பு பயிரிடுதலும், சுற்றுலாவுமே. இவை இரண்டும், மே புரட்சிக்குப் பிறகு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications