தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கப்பலில் -மூச்-சுத் -தி-ண-றி இறந்-து லண்-டன் துறைமுகத்தில் ஒ-துங்-கி--ய 55 உடல்-கள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:

இங்கிலாந்திலுள்ள டோவர் துறைமுகத்தில் பிணமாகக் கிடந்த 58 பேரும் கண்டெய்னர்களுக்குள் மூச்சுத் திணறி இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

டோவர் துறைமுகத்தின் சரக்குப் பெட்டகத்திலிருந்து 58 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்கள் யார் என்பதும், எப்படி இறந்தார்கள் என்பதும்தெரியாமல் இருந்தது. இதுகுறித்து நடந்த தீவிர விசாரணையின் இறுதியில், இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என்று தெரிய வந்துள்ளது.

மொத்தம் 60 பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைவதற்காக இவர்கள் கப்பல் கண்டெய்னர்கள் மூலம் வந்துள்ளனர். இவர்களில் 58பேர் மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர். 2 பேர் மட்டும் பிழைத்துக் கொண்டனர். மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் இவர்கள்கூறியதாவது:

அனைவரும் கப்பல் கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டோம். கண்டெய்னருக்கு உள்ளே காற்று வர வாய்ப்பே இல்லை. மேலும்அதிகஅளவுக்கு ஆட்களும் இருந்தனர்.இதனால் அனைவரும் மூச்சுத் திணறிக் கொண்டு இருந்தனர். தப்பிக்க முயற்சி கொல்வதற்குள் 58 பேர்இறந்தனர்.

வெயிலும் அதிகமாக இருந்ததால், உள்ளே இருந்தவர்களுக்கு, மயக்கமும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

நாங்கள் தப்பிப்பதற்காக கண்டெய்னருக்குள் இருந்த இருட்டில், இறந்து கிடந்த உடல்கள் மீது ஏறியவாறு, பின் கதவு வழியாக வெளியே வந்தோம்.என்றனர்.

கப்பல் கண்டெய்னரில் மூச்சுத் திணறி இறந்தவர்களில் 4 பேர் பெண்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, டச்சு நாட்டில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றை, டோவர் துறைமுகத்திற்கு அருகே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது, ஆட்கள்கடத்தலில் ஈடுபடுத்துவோர் பயன்படுத்தும் லாரி என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் தனியாக இந்த லாரிநின்று கொண்டிருந்தது.

ஐரோப்பிய தலைவர்கள் அதிர்ச்சி:

கப்பல் கண்டெய்னருக்குள் சிக்கி 58 பேர் இறந்தது குறத்து ஐரோப்பிய தலைவர்கள் அதிர்ச்சியும், ஆட்களைக் கடத்துவோருக்கு கண்டனமும்தெரிவித்துள்ளனர்.

சீனாவில் மொத்தம் 7 முதல் 10 ஆள் கடத்தும் கும்பல்கள் இயங்கி வருகின்றன. இவர்கள் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு ஆட்களைக் கடத்திவருவதாக இங்கிலாந்து போலீஸ் கூறியுள்ளது.

இதே போல, இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கும் 5 குழுக்கள், ஆட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும்20,000 முதல் 30,000 ஆட்கள் வரை இவ்வாறு கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக வரும் ஆண்கள் தங்களிடமுள்ள பணம் முழுவதையும் ஆள் கடத்தலில் ஈடுபடும் ஏஜென்டுகளிடம் கொடுத்து விடுகின்றனர். பெண்கள்கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+