For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்"- நிர்-ம-லா சு-ரேஷ்

By Staff
Google Oneindia Tamil News

இலங்-கை பிரச்-ச-னை-யில் இந்-தி-யா-வின் நிலை- மா-ற-லாம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அதே சமயம், இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் நிலை, அதன் தடுமாறும் வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிப்பதாக உள்ளதாக டெலிகிராப்பத்திரிகை கூறியுள்ளது.

அதன் தலையங்கம் இப்படிப் போகிறது....செக், ஸ்லவேகியா போல இலங்கையை இரண்டாகப் பிரிக்கலாம் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறிய கருத்தைஉறுதியாக நிராகரித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய். கருணாநிதியின் சொந்தக் கருத்து இது என்று அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் 1983-ல் தங்களது போராட்டத்தைத் துவக்கினர். யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அன்றிலிருந்து இன்று வரை மிக நீண்டவரலாறுகளையும, போராட்டங்களையும் கொண்டவர்கள் புலிகள்.

விடுதலைப் புலிகளை சர்வதேச சமுதாயம் பலவிதங்களில் கையாண்டுள்ளது. தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி, இலங்கையில் ஆதிக்கம் செலுத்தலாம் என்றுஇந்தியா நினைத்த காலம் உண்டு. ஆனால் அப்போது புலிகளின் பலம் அதிகம் இல்லை. இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

அரசுப் படைகளை துவம்சம் செய்து முன்னேறி வருகிறார்கள் புலிகள். தங்கள் சொந்தக் காலில் வெற்றியை சாதிக்கும் அளவுக்கு வலுவுடன் உள்ளனர்.நிச்சயம் தாங்கள் நினைத்ததை அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தச் சூழ்நிலையில், இடைக்கால கவுன்சில், ஆட்சியில் பங்கு போன்றசாதாரண தீர்வுகள் அவர்களைத் திருப்திப்படுத்தும் என்று தோன்றவில்லை. கெளரவமான, முழுமையான சுதந்திரத்தையே விடுதலைப் புலிகள்விரும்புகிறார்கள்.

போர்க்களத்தில் புலிகளின் போர் யுக்திகளுக்கு முன்பு இலங்கை ராணுவமும், கப்பல் படையும் கூனிக் குறுகி நிற்கின்றன. இதன் காரணமாகவே,யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்களைக் காக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் இந்தியாவின் உதவியை நாடினார் சந்திரிகா.

சந்திரிகாவின் அமைதித் தீர்வுக்கான முயற்சிகளுக்கு சிங்கள மக்களிடையே ஆதரவு இல்லை. 1987-ல் இந்திய அமைதி காக்கும் படை வந்து சென்றதைஇன்னும் கூட சிங்களர்கள், கெட்ட கனவாகவே கருதி வருகின்றனர். தெற்காசியாவில் இந்தியாவை வல்லரசாக நிலை நிறுத்த அப்போதைய பிரதமர்ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சியாகவே அதை சிங்களர்கள் கருதினர். எனவே இந்தியாவின் தலையீடு ராணுவ ரீதியில் இருக்குமானால் அதற்குஎந்தளவு வரவேற்பு இருக்கும் என்று தெரியாது.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் எந்தப் பயனையும் கொடுக்காத ஒப்பந்தம், 1987-ல் ராஜீவ் காந்திக்கும், அப்போதைய இலங்கை அதிபர்ஜெயவர்த்தனாவுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம்.

விடுதலைப் புலிகளின் போர் யுக்திகள், உலக சமுதாயத்திற்குப் பிடிக்காததாக இருக்கலாம். அவர்களது மனித வெடிகுண்டுகளுக்கு உலகம் முழுதிலும் எதிர்ப்புஉள்ளது. இருப்பினும் நிறுத்த முடியாத சக்தியாக அவர்கள் வளர்ந்து விட்டனர். இதன் காரணமாகவே, வேறு வழியின்றி இந்தியா மற்றும் பிற நாடுகளின்உதவியை இலங்கை நாடியது.

விடுதலைப் புலிகள் குறித்த தங்களது நிலையை தெளிவாக விளக்காத எந்தத் தமிழ்க் கட்சியும் தற்போது தமிழகத்தில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.தி.மு.க கூட்டணியில் உள்ள மதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் தங்களது புலிகள் ஆதரவு நிலையை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளன.

தமிழர்களுக்கென்று தனி நாடு உருவாவதை இந்தியத் தமிழர்களும் ஒதுக்கித்தள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழ் உணர்வு காரணமாக தமிழ் ஈழத்திற்குஆதரவான அலை தமிழகத்திலும் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, இலங்கை அரசுக்கு உதவுவதில்லை என்ற முடிவை பிரதமர் வாஜ்பாய் எடுக்கநேரிட்டது.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்தால், இலங்கை குறித்தகொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ள நேரிடலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X