தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இங்-கி-லாந்--தில் வீடு தேடும் கிளிண்டன்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:

அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்தில் குடியேறப் போகிறார் அமரிக்க அதிபர் கிளிண்டன்.

லண்டன் பத்திரிகையொன்றில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அருகே கிளிண்டன் வீடுபார்ப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 1960-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கிளிண்டன் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிண்டனின் வீடு பார்க்கும் படலம் குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் ஜோ லோக்கர்ட் கூறுகையில், பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இங்கிலாந்தில் குடியேற கிளிண்டன் திட்டமிட்டுள்ளார். இருப்பினும், செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுக் கழகத்தில் அவர் தலைவராகஉள்ளார். அந்தப் பணியை முடித்து விட்டுத்தான் அவர் லண்டன் வீட்டுக்குக் குடி போவார் என்று நினைக்கிறேன்.

அதிபர் பதவிக்குப் பிறகு இங்கிலாந்தின் எலைட் பல்கலைக்கழகத்தில் கிளிண்டன் ஆசிரியராகப் பணியாற்றுவார் என்ற செய்தி தவறானது. இதில்உண்மையில்லை என்றார் அவர்.

ஆக்ஸ்போர்டுக்கு 12 மைல் தொலைவில் உள்ள கிளிம்ப்டன் கிராமத்தில் கிளிண்டன் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த இடத்தில் வீடு பார்க்கலாம்என்று அமெரிக்காவுக்கான செளதி அரேபிய தூதரான இளவரசர் பந்தர் பின் சுல்தான்தான் கிளிண்டனுக்கு சிபாரிசு செய்துள்ளார்.

இளவரசர் சுல்தான், கிளிம்ப்டன் கிராமத்தில் மொத்தம் 21 சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளார். இவற்றில் ஒன்றை, கிளிண்டனுக்கு மூன்று வருடலீசுக்கு அவர் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிண்டன் இங்கிலாந்தில் வீடு பார்த்துப் போனாலும் கூட, மனைவி ஹில்லாரி அவருடன் வர மாட்டார் என்று தெரிகிறது. செனட் தேர்தலில் அவர்போட்டியிடுவதால் ஹில்லாரி அமெரிக்காவிலேயே இருப்பார் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 1-ம் தேதி கிளிண்டனின் பதவிக்காலம் முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+