தமிழகத்தில் இன்று
பியூர்டோரிகா அரசுடன் இன்டெலியின் புதிய ஒப்பந்தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹைதராபாத்:
பியூர்டோரிகா அரசுடன் இணைந்து, பியூர்டோரிகாவிலுள்ள டிருஜிலோ நகரில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மையத்தை அமைக்க ஏஎஸ்பி நிறுவனமானஇன்டெலி நிறுவனம், ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
வளர்ச்சி மையம் தவிர, ஆய்வு மற்றும் பயிற்சிப் பிரிவுகளையும் இன்டெலி துவக்குகிறது. இந்த ஆண்டின் மத்தியில் இப்பிரிவுகள் அனைத்தும் இயங்கத்துவங்கும்.
ஏற்கனவே வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இன்டெலி தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போதுபியூர்டோரிகாவுக்கு வந்துள்ளது.
பியூர்டோரிகாவைச் சேர்ந்த திறமையான 500 பொறியாளர்களுக்கு இன்டெலியின் பியூர்டோரிகா பிரிவில் பயிற்சிமற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.இதற்காக 9 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
பியூர்டோரிகாவில் அமையவுள்ள வளர்ச்சி மையத்தில் பியூர்டோரிகா தொழில் வளர்ச்சி நிறுவனமும் பங்கேற்கும்.
இந்த ஒப்பந்தம் குறித்து பியூர்டோரிகா ஆளுநர் பெட்ரோ பெஸ்ஸோ கூறுகையில், லத்தீன் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியாக மாற்ற இந்தஒப்பந்தம் உதவும் என்றார்.
இன்டெலி நிறுவன தலைவர் அர்ஜூன் வல்லூரி கூறுகையில், லத்தீன் அமெரிக்காவின் நுழைவாயிலாக பியூர்டோரிகா இருப்பதால் இங்கு வர்த்தகத்தைமேற்கொள்ள முடிவு செய்தோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications