தமிழகத்தில் இன்று
4 பாகிஸ்-தான் உளவாளிகள் மீது குற்-றப் பத்-தி-ரிக்-கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கவுஹாத்தி:
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நான்கு ஐஎஸ்ஐ உளவாளிகள் மீது போலீசார் வியாழக்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஎஸ்ஐ உளவாளிகள் நான்கு பேர் கவுஹாத்தியில் உள்ள ஏஎன்இசட் கிரின்லேஸ் வங்கியில் வெளிநாட்டு பணத்தை மாற்ற முயன்ற போதுபோலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜாவித் வாகார், ஃபசாயுல்லா, குவாரி சலீம், முகமது அக்ரம் ஆகியோர் மீது வியாழக்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்களில் ஜாவித் வாகார், மற்றும் ஃபசாயுல்லா ஆகியோர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மேல் கைது செய்யப்பட்டு 90நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது போலீசார் மீண்டும் அவர்களைக் கைது செய்துள்ளனர். பிற ஐஎஸ்ஐ உளவாளிகள் குவாரி சலீம் மற்றும் முகமது அக்ரம் ஆகியோர்ஏற்கனவே காஷ்மீர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
இந்த நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.