தமிழகத்தில் இன்று
வைகை ஆற்றில் 700 வயது காளி சிலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
வைகை ஆற்றில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய காளி சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் காளி சிலை இப்போது அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையைக் கண்டுபிடித்தவர்கள், அங்கிருந்த சந்தானமாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
இதறகிடையே, சிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கோவில் நிர்வாகம் இச்சிலையை மதுரை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தது.
ஒன்றரை அடி உயரமுள்ள இச்சிலை கிபி 12 அல்லது13 ம் நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
காளியம்மன், பீடத்தின் மேல் வீற்றிருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வலது கையில் சூலம், கீழ் வலது கையில் கத்தி, கீழ் இடது கையில் கபாலமும் ஏந்தியவாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலையின் மேல் இடது கை உடைந்துள்ளது. வைகை ஆற்று நீரில் நீண்டகாலம் கிடந்ததால் முக அமைப்பு தெளிவாக இல்லாமல் தேய்ந்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications