தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையில் 15 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை அருகே ரூ. 15 லட்சம் மதிப்புள்ள எரிசாரயம் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சித் தாலுகாவில் உள்ள அம்பாரம்பாளையத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅந்த வழியாக கேரளாவிற்கு ஒரு லாரி சென்றது. இதனைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றதால் அதனைவிரட்டிச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அதில் 35 லிட்டர் வீதம் 236 கேன்களில் எரிசாரயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட லாரி மற்றும் எரிசாராயம்ஆகியவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆனைமலைப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications