தமிழகத்தில் இன்று
4 கை, கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நெல்லை:
நெல்லை அருகே, ஒரு பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் அதிசய குழந்தை பிறந்தது.
இந்த அதிசயக் குழந்தை தற்போது பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சான் குளத்தை சேர்ந்தவர்சுப்பு ராஜ் . இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் ஆனது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்து மூன்றேநாட்களில் இறந்தது.
இந்த நிலையில் பாண்டியம்மாள் மீண்டும் கருத்தரித்தார். அவரை பிரசவத்திற்காகசுப்புராஜ் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். திருவேங்கடத்தில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் பாண்டியம்மாளை சேர்த்தனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவுடாக்டர்கள் ஆபரேஷன் மூலம் குழந்தையை எடுத்தனர்.
பிறந்தது ஆண் குழந்தை. ஆனால் குழந்தைக்கு 4 கைகளும், 4 கால்களும், 2 பிறப்புஉறுப்புகளும் இருந்தது. இது தவிர தொப்புள் வழியாக குடலும் வெளியே இருந்தது.
அதிசயக் குழந்தை குறித்து டாக்டர்கள் கண்ணன், மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,இதுபோன்ற குழந்தை பிறப்பது அரிது. பொதுவாக ரத்த சம்பந்தமான உறவுகொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிறப்பு கோளாறுகள்இருக்கும். பாண்டியம்மாளின் கணவர் சுப்புராஜ் அவருடைய தாய் மாமன்.
இந்த குழந்தை இரட்டையாக கருத்தரித்துள்ளது. துவக்கத்தில் இரண்டு குழந்தைகளும்வளர்ச்சி அடைந்துள்ளன. பின் ஒரு குழந்தை மட்டும் முழு வளர்ச்சி அடைந்துள்ளது.இது வளர்ச்சி அடையாத குழந்தையுடன் ஒட்டி பிறந்து விட்டது.
தொப்புள் வழியாக குடல் வெளியே உள்ளதால் அதை உடனடியாக ஆபரேஷன்செய்து வயிற்றுக்குள் வைக்க வேண்டும். ஆனால் குழந்தைக்கு இதயக் கோளாறுஇருப்பதற்கான அறிகுறியாக உடல், நீலம் பாய்ந்து காணப்படுவதால் மேற்கொண்டுபரிசோதனை செய்து முடிவெடுக்க உள்ளோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications