For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்

By Staff
Google Oneindia Tamil News

மக்களின் சகோதரன் நான்...உருகுகிறார் கருணாநிதி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

உங்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கிற ஒரு சகோதரன் நான், கடமைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். செய்து கொண்டிருப்பேன் என்றார் முதல்வர்கருணாநிதி.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத் திறப்பு விழாவில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

நீண்ட நேரம் நான் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். காரணம் உங்களுக்குத் தெரியும். ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலம் குன்றி முதுகில் கடுமையான வலிஏற்பட்டு, நின்று கொண்டு பேசுவதற்கே முடியாத சூழ்நிலை.

சுற்றுப் பயணத்தை ஒத்திவைக்கலாமா என்று கூட யோசித்தேன். ஆனால், பலருடைய மனம் வேதனைப்படும் என்பதற்காக என்னுடைய உடல் நலம்இன்னும் மோசமானலும் பரவாயில்லை என்று கருதி உங்கள் முன்னால் நிற்கிறேன்.

நான் ஏறத்தாழ 65 ஆண்டு காலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரன். வயது 77 என்றாலுங் கூட, 12, 13ம் வயதிலிருந்தே பொது வாழ்விலேஅடியெடுத்து வைத்து ஏறத்தாழ 65 ஆண்டுகாலமாக உங்களோடு இருக்கிறேன்.

இன்று முதல்வராக வந்து நாமக்கல் மாவட்ட மக்களை சந்திக்கிறேன். சாதாரண பேச்சாளனாக வந்து உங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு சட்ட மன்றஉறுப்பினராக, ஒரு அமைச்சராக வந்து உங்களைப் பார்த்து இருக்கிறேன்.

இந்த 65 ஆண்டு காலத்தில் இந்தப் பதவி பொறுப்புகள் மாத்திரமல்ல நான் பல முறை சிறை சென்று மீண்டு, நீங்கள் அதற்காக அளித்த வர்வேற்பை,பாராட்டைப் பெறுவதற்காக வந்திருக்கிறேன். இன்னும் சில நேரங்களில் சிறை செல்வதற்கு முன்பு உங்களிடம் விடை பெறுவதற்காக வந்திருக்கிறேன்.

எனவே உங்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்ற ஒரு சகோதரன் நான். அந்த உணர்வோடுதான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். ஏதோஅரசு பீடத்தில் அமர்ந்து கொண்டு நாட்டு மக்களுக்கு எதையெதையோ செய்தேன் என்று கோலோச்சுபவன் சொல்வதைப் போலச் சொல்லவில்லை.

ஒரு சகோதரன் மற்ற சகோதரர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை, கடமைகளை சாதனைகளைத்தான் செய்திருக்கிறேன். இன்னும் செய்வேன். செய்துகொண்டே இருப்பேன் என்றார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X