தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்-கை-யில் திட்டமிட்டபடி பொதுத்தேர்தல்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அங்கே பொதுத்தேர்தல்திட்டமிட்டபடி நடக்கும் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 25 ம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டபின் மூன்று மாதங்களக்குள் திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடக்கும் என்று சந்திரிகாதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் சந்திரிகா கூறுகையில், இலங்கையில் பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் அதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றார்.

அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 25 ம் தேதியுடன் முடிவடைகிறது.

தலைநகர் கொழும்பில், சந்திரிகா அரசும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன.

தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆளும்கட்சி ஆலோசித்து வருகிறது.

எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கத் தயார் என்று எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் அஷ்ரப் கூறுகையில், தாங்கள் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும்,இதற்காக விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+