தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

திருமணமான 20 நாளில் மனைவியை எரித்தவருக்கு ஆயுள் தண்டனை

கோவை:

திருமணமான 20 நாளில் மனைவியை எரித்துக் கொன்ற குடிகாரக் கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (32). இவருக்கும்அய்யம்மாள் (18) என்பவருக்கும் கடந்த 97-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில நாட்களில் பாலசுப்ரமணியம் சுயமாக தொழில் செய்யவேண்டும் எனக் கூறி, பணம் தருமாறு கேட்டுள்ளார். அய்யம்மாள் தனது பெற்றோர்வீட்டில் தற்போது பணம் எதுவும் இல்லை எனக் கூறி தனது கழுத்தில் கிடந்த 3 பவுன்தங்க நகையை கொடுத்துள்ளார்.

இதனைப் பெற்றுக் கொண்ட பாலசுப்ரமணியம், நகையை அடகு வைத்து பணத்தைப்பெற்றார். பின்னர் நேராக மதுபானக் கடைக்குச் சென்று குடித்தார். பணம் தீர்ந்தநிலையில் வீடு திரும்பினார்.

இதனையடுத்து ஓரிரு நாட்களில் தனது நகையைத் திருப்பித் தருமாறு அய்யம்மாள்,பாலசுப்ரமணியத்திடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில்ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியம், மண்ணெண்ணெயை அய்யம்மாள் மீது ஊற்றி தீவைத்துள்ளார். படுகாயம் அடைந்த அய்யம்மாள், அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், மண்ணெண்ணெய் ஊற்றிமனைனவியைக் கொலை செய்த பாலசுப்ரமணியத்திற்கு ஆயுள் தண்டனை விதித்துகோவை முதலாவது மாவட்ட நீதிமன்ற நீதிபதி வாசுகி தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+