தமிழகத்தில் இன்று
வைகோவைப் பார்த்துப் பெரு-மைப்படுகிறேன்...கரு-ணாநிதி -புகழாரம்
கோவை:
வளர்ந்-து தலை-வ-ரா-க மா-றி-யி-ருக்-கும் வை-கோ-வைப் பார்த்-து ---பெ-ரு-மைப்-ப-டு-கி---றன் என்-று மு-தல்-வர் க-ரு-ணா-நிதிகூ-றி-யுள்-ளார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியை ஊனப்படுத்த வேண்டும் என்ற தவறான நோக்கத்தை முறியடிக்கும் வகையில்,கூட்டணி ஆட்சி நல்லமுறையில் நடந்து வருகிறது என்றார் முதல்வர் கருணாநிதி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மாநாட்டில் அவர்பேசியதாவது:
கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஈரோட்டில் தங்கி பெரியாருடன் பணியாற்றினேன். அவர் வழியில்அண்ணா தொடங்கிய இயக்கம், அவருடைய பேச்சு, எழுத்து ஆகியவை தமிழ் சமுதாயத்திற்கு எவ்வளவுஉதவியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவரைத் தொடர்ந்து என்னையும் மக்கள்குறிப்பிடுகின்றனர்.
என்னுடைய தலைமையில் இயங்கி, கழகத்தின் போர்வாள் என அழைக்கப்பட்ட வைகோ, இன்று தனிக் கட்சிதொடங்கி தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
பிரிந்தவர்கள் சந்திக்க நேர்ந்தால் சங்கடங்கள் உருவாவது உண்டு. சில சமயம் அதுவே நன்மையாகவும்அமைவதுண்டு. தற்போது அவரும் நல்ல நிலையில் உள்ளார். நானும் நல்ல நிலையில் உள்ளேன். இருவரும் இங்குசந்திப்பது நன்மைக்கே.
இங்கு தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளாக ம.தி.மு.க.,வும், தி.மு.கவும் உள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணி. இந்தக் கூட்டணி வரும் காலத்திலும் தொடரவிரும்புகிறேன்.
பாரதீய ஜனதா கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தபோதும், வாஜ்பாயை ஏற்றுக் கொண்டவன் நான்.அவருடைய பண்பு, வல்லமை ஆகியவை பாராட்டத்தக்கது. இந்த கூட்டணி உதயமானபோது தேர்தல்அறிக்கையில் சில பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. இதில் சிறுபான்மையினர் நலன் காத்தல், ஜாதி, மதஅடிப்படையில் யாரும் நடத்தப்படமாட்டார்கள், நியாயமான ஒரு கூட்டணியாக இது விளங்கும் எனபிரகடனப்படுத்தப்பட்டது.
இதன்படியும் தற்போது தவறாமல் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சுகள்தாக்குதலுக்குள்ளானபோது அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா வந்த போப் ஆண்டவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியைஊனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை முறியடிக்கும் வகையில் இன்று கூட்டணி செயல்பட்டு வருகிறது.
இங்கு திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருவேறு கட்சிகளாகஇருந்தாலும், என் மனதில் இரண்டும் ஒரே கட்சியாகவே தோன்றுகிறது. என்னையும் வைகோவையும் பிரித்துப்பார்க்கவில்லை. ஒன்றாகத்தான் பார்க்கிறேன். எல்.கணேசனையும் ஒன்றாகத் தான் பார்க்கிறேன். குழந்தை மீதுதாய்க்கு எப்போதும் கோபம் வராது என்றார் கருணாநிதி.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications