யோகம் பயிலுவோம்
பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வளர்ந்த நாடுகளே காரணம் - மாறன்
டெல்லி:
உலக நாடுகளிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளே காரணம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறைஅமைச்சர் முரசொலி மாறன் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த நாடுகள் எல்லாம் தங்களுக்கிடையே இன்டலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் (ஐ.பி.ஆர்.) என்ற பகுதியை உருவாக்கியுள்ளன.
இந்த இன்டலெக்சுவல் பிராப்பர்டி ஆர்கனைசேஷனின் உலக அமைப்பின் 3 நாள் கருத்தரங்கை அவர் டெல்லியில் துவக்கி வைத்துப் பேசியதாவது.
வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஐ.பி.ஆர். நடவடிக்கையால் அந் நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுஏற்பட்டுள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க, உலக வர்த்தக அமைப்பை (டபிள்யூ.டி.ஓ.) வலுப்படுத்தும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு உலக சுகாதார அமைப்பின்திட்டங்களைச் செயல்படுத்த அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
வளர்ந்த நாடுகள் எல்லாம் தாங்கள் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம் காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.ஆனால், அந்த முயற்சிகளையும், தொழில்நுட்பங்களையும் வளரும் நாடுகளுக்குத் தர அவை மறுத்து வருகின்றன.
இதனால் தொழில்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் முன்னேற்றம் காண மிகவும் சிரமப்படுகின்றன. வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்தநாடுகள் இடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் நிலையில், உலக வர்த்தக அமைப்பு தனது புதிய ஒப்பந்த முடிவுகளை அமல்படுத்தும்படி மூன்றாம் நாடுகளைநிர்பந்திக்கிறது.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்த முடிவுகளில் பல ஓட்டைகளும், பாகுபாடுகளும் ஏராளமாக உள்ளன. மேலும், ஒரு நாட்டுக்கு மட்டுமே
உரிமையான ஒரு பொருளுக்கு வளர்ந்த நாடுகள் காப்புரிமை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீப காலத்தில் இந்தியாவுக்கு மட்டுமே உரிமையான மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இது பெரிய திருட்டு மட்டுமல்ல, ஏழை நாட்டின் அதிகாரப்பூர்வ உரிமையில் தலையிடுவது போல் ஆகும் என்றார் மாறன்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications