தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஜோர்டான் விமானக் கடத்தல் முறியடிப்பு:
கடத்தல்காரர் சுட்டுக் கொலை

காயமடைந்த அமெரிக்க
சிறுமியை மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் வீரர்கள்.
அம்மான்:

ஜோர்டான் விமானத்தைக் கடத்த முயன்ற சிரியா நாட்டு கடத்தல்காரர்கள் மீதுஜோர்டான் அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தி கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.இதில் ஒரு கடத்தல்காரர் கொல்லப்பட்டார்.

அம்மான் விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் டமாஸ்கஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது. இதில் 84 பயணிகள் இருந்தனர். விமானம் கிளம்பிய 30 நிமிஷத்தில்அதைக் கடத்தியதாக சிரியாவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் அறிவித்தனர்.

கடத்தல்காரர்கள் மொத்தம் நான்கு பேர். அவர்களில் ஒருவர், கையில் துப்பாக்கியும்,கையெறி குண்டும் (கிரனேட்) வைத்திருந்தார். விமானி இருக்கும் காக்பிட் அறைக்குள்நுழைய முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அவரைத்தடுத்தனர்.இதையடுத்து அவர்கள் மீது அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். கையில்இருந்து கிரனேடையும் வீசினார். இதில் அது வெடித்ததில் 15 பயணிகள்காயமடைந்தனர். இதில் விமானமும் லேசாக சேதமடைந்தது.

இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது பாதகாப்புப் படையினர் சுட்டனர். இதில் ஒருகடத்தல்காரர் கொல்லப்பட்டார். மற்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.கடத்தல்காரர்களிடம் சிரியா நாட்டு அடையாள அட்டைகள் இருந்தன. இவர்கள் ஏன்விமானத்தைக் கடத்த முயன்றார்கள் என்பது தெரியவில்லை.

ஜோர்டானில் 1970ம் ஆண்டு வரை அதிகஅளவில் விமானக் கடத்தல்கள் நடப்பதுஅதிகம். இஸ்ரேலுக்கு எதிரான இயக்கத்தினர் இவற்றில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால்அதற்குப் பிறகு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. விமானக் கடத்தல் போன்றவைமிகவும் அரிதான விஷயமாக இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+