யோகம் பயிலுவோம்
தீர்ப்பை நெருங்குகிறது மாஜி அமைச்சரின் ஊழல் வழக்கு
சென்னை:
மாஜி அதிமுக அமைச்சர் பொன்னுசாமியின் ஊழல் வழக்கு தீர்ப்பை நெருங்குகிறது. இவ்வழக்கில் இறுதி வக்கீல்கள் வாதம் 24ம் ததி நடைபெறும்என்று தனி நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் வியாழக் கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் பேராசிரியர் மருங்காபுரி பொன்னுசாமி. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்தை மீறி 77லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக இவர் மீதும், இவரது மனைவி பிரபாவதி, மகள் மாலா, தம்பிகள் வெங்கடேசன்,ராஜப்பா, ஆடிட்டர் ஜெயராம் ஆகிய 6 பேர் மீது தனி நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கை இரண்டாவது தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இதுவரை 65 அரசு தரப்புச் சாட்சிகளும், 45 எதிர் தரப்பு சாட்சிகளும்விசாரிக்கப்பட்டுள்ளனர். வியாழக் கிழமையுடன் இரு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது என்றும், வருகிற 24ம் தேதி இறுதி வக்கீல்கள்வாதம் நடைபெறும் என்றும் நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து 24ம் தேதி இவ்வழக்கில் இறுதி வக்கீல்கள் வாதம் நடைபெறும். அத்துடன் வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு, விரைவில்தீர்ப்பு கூறப்படும் எனத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications