மே.இ. தீவுகளை "விழுங்கியது ஜிம்பாப்வே
பிரிஸ்டல்:
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மூன்று நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்தது.
இங்கிலாந்து அணியும் கலந்து கொள்ளும் இந்த மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே அணிக்கும்,மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே பிரிஸ்டாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. பிரையன் லாராசிறப்பாக ஆடி அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து ஹைன்ட்ஸ் 51 ரன்களும், கெய்ல் 41 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணியில் பிரென்ட், கிரான்ட் பிளவர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
50 ஓவரில் 233 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனது ஆட்டத்தை ஜிம்பாப்வே தொடங்கியது. 24 ரன்கள்எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டை ஜிம்பாப்வே இழந்தது.
ஆனால், அடுத்து வந்தவர்கள் ஓரளவு நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக துவக்க ஆட்டக்காரர்க நீல் ஜான்சன் சிறப்பாக ஆடினார். அவர்கடைசி வரை அவுட்டாகாமால் 95 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆட்டநாயகராக நீல் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.
ஜான்சனும், ஆன்டி பிளவரும் 4-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். பிளவர் 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் 45.1 ஓவரில் 4 விக்கெட்இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
மூன்று நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் அடுத்த ஆட்டம் ஜிம்பாப்வேக்கும், இங்கிலாந்துக்கும் இடையே ஓவல் மைதானத்தில்சனிக்கிழமை நடைபெற உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications