தமிழகத்தில் இன்று
இந்தோனேசிய வன்முறையில் 22 பேர் சாவு
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் மொலுக்காஸ் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் இறந்தனர்.தாக்குதலுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இச் செய்தியை ஜகார்த்தா உள்ள அன்தாரா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொலுக்காஸ் பகுதியில் சில தினங்களுக்கு முன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் இறந்தார். அதற்குப் பதில் தாக்குதலாகசமீபத்திய தாக்குதல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களா என்பது தெரியவில்லை. ஆனால், மொலுக்காஸ் பகுதியில் உள்ள வாய் கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன்நுழைந்த தீவிரவாதிகள் சிலர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதில் 22 பேர் இறந்தனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்குப் பயந்து அருகில் உள்ளகாடுகளை நோக்கி ஓடிவிட்டனர். பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன.
மொலுக்காஸில் 1999-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரைஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
கடந்த வாரம் அம்பான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 40பேர் கொல்லப்பட்டனர். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தபோதும் இம் மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications