தமிழகத்தில் இன்று
அமெரிக்க பாதுகாப்பு வளைய ஏவுகணைச் சோதனை தோல்வி
வாஷிங்டன்:
அமெரிக்கா மேற்கண்ட ஏவுகணைச் சோதனை இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது.
அமெரிக்க தேசிய ஏவுகணை பாதுகாப்பு வளைய அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வான்டென்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பசிபிக் பெருங்கடலில் குவாஜலீன் என்ற இடத்திலிருந்து ஏவுகணையின் இலக்கு விண்ணில்செலுத்தப்பட்டது. மணிக்கு சுமார் 24 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட ஏவுகணை இலக்கைத் தாக்கத் தவறிவிட்டது.
இதனால், ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்தது. இரண்டாவது முறையாக இந்த ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் முதன்முறையாக இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டது. அப்போது சரியாக இலக்கைத் தாக்கியது ஏவுகணை.
ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாகச் சோதிக்கப்பட்டபோது இலக்கைத் தாக்க ஏவுகணை தவறிவிட்டது. தற்போது இரண்டாவதுமுறையாக ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளது.
இதை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். மேற்கொண்டு எந்தத் தகவலையும் அவர்தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நாட்டின் பாதுகாப்புக்கு ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷியா மற்றும் சீனாவிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆகவே, இப் பிரச்சினை குறித்து அடுத்த சில வாரங்களில் முக்கிய முடிவை அதிபர் பில் கிளின்டன் எடுக்கவுள்ளார்.
இந் நிலையில், இரண்டாவது முறையாக புதிய ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகக் கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications