தமிழகத்தில் இன்று
தேர்தல் யுக்தி குறித்து மூப்பனார் ஆலோசனை
சென்னை:
தேர்தலுக்கான யுக்திகள் குறித்து மாவட்டத் தலைவர்களுடன் மூப்பனார் சென்னையில்மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
த.மா.கா மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில்நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51 மாவட்டத் தலைவர்கள், மாநிலநிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் நிர்வாக அமைப்புகளை சீர்படுத்தும் வகையில் 36 ஆக இருந்த மாவட்டத்தலைவர் பதவிகளை 51 ஆக உயர்த்தியுள்ளார் மூப்பனார். பெரும்பான்மையானமாவட்டங்களுக்கு புதியவர்களை தலைவராக நியமித்துள்ளார்.
இந்த மாற்றத்திற்கு பின்னர் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் இது. சனிக்கிழமை காலை மூப்பனார் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் மாநல நிர்வாகிகள்ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், 51 மாவட்டத்தலைவர்கள் பங்கேற்றனர்.
கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர்கள் மத்தியில் மூப்பனார் பேசினார். காமராஜர்பிறந்த நாள் விழாவை ஒட்டி வருகிற 15ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மாவட்டம்தோறும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கட்சி வளர்ச்சிப் பணிகளில் அதிக அக்கறை செலுத்தும்படியும், தேர்தலுக்கு தயாராகஇருங்கள் என்றும் கட்சியினரை மூப்பனார் கேட்டுக் கொண்டார்.
மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அணுகுமுறைகள் குறித்தும்,கூட்டணி விஷயங்கள் குறித்தும் மாவட்டத் தலைவர்களிடம் மூப்பனார் கருத்துக்களைகேட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications